ஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் இவை இருந்தால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

navagraha

மனிதனின் ஒவ்வொரு செயலும் விண்ணில் இருக்கும் நவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இருக்கிறது என்பது பல ஆண்டுகள் ஜோதிட அனுபவம் பெற்ற ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கும், புதன் ஒருவரின் ஆறிவாற்றலுக்கும் மற்றும் சுக்கிரன் கிரகம் மனிதன் அனுபவிக்கும் சுகங்களுக்கு காரணமாக இருக்கின்றன. இந்த 3 கிரகங்களும் சேர்ந்து இருப்பதால் ஒருவரின் வாழ்வில் எத்தகைய பலன்கள் ஏற்படும் என்பது இங்கே தெரிந்து கொள்ளலாம்.

astro

ஒரு மனிதனின் மன நலம் மற்றும் சித்தத் தெளிவு இருக்கே சந்திர பகவான் காரகத்துவம் வகிக்கிறார். புதன் பகவான் கல்வி மற்றும் கலைகளில் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஒரு ஜாதகருக்கு தருபவராக இருக்கிறார். சுகம் அனுபவித்தல் என்பது அனைவருக்குமே விருப்பமான ஒன்று. எத்தகைய சுகமும் ஒரு மனிதன் அனுபவிப்பதற்கு அவனது ஜாதகத்தில் சுகாதிபதியான சுக்கிரனின் நிலை நன்றாக இருக்க வேண்டும்.

சந்திரன், புதன், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதக கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால் இந்த மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று பார்வை ஏற்பட்டாலும் ஜாதகர் அதி புத்திசாலியாக இருப்பார். பல கலைகள் கற்று தேர்ந்த வித்தகராக இருப்பார். ஒரு விஷயத்தை பார்த்த உடனேயே அதை செய்துகாட்டி விடும் திறமை பெற்றிருப்பார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். கலாரசனை மிகுந்தவர்கள். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், கவிதை, படைப்பு, எழுத்து, பேச்சு போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்று பொருளும், புகழும் ஈட்டுவார்கள்.

சமயங்களில் பிறர் நம்பி ஏமாறும் வகையில் பொய்களை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை மயக்கி வசப்படுத்தி விடுவார்கள். சபல புத்தி அதிகம் இருக்கும். காதல், காம சுகத்தில் ஆதீத விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமை ஆகும் நிலையும் ஏற்படும். வாழ்க்கையில் பல உயர்வு, தாழ்வுகளை சந்திப்பார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அதில் எப்படியாவது புகழ், பணம் சம்பாதித்து விடுவார்கள். சிறந்த வழக்குரைஞர்களாகவும், ஆடிட்டர்களாகவும் உருவாகும் அமைப்பு இத்தகைய கிரக அமைப்புகளை கொண்டவர்களுக்கு அதிகம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
12 வீடுகளில் குரு இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Moondru graham palangal in Tamil. It is also called as Jathagam palan in Tamil or Grahangal paarvai in Tamil or Sukran chandran serkai in Tamil or Budhan chandhiran serkai in Tamil.