வீட்டில் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? வீட்டிற்குள் நுழையும் மூதேவியை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்?

annapoorani-rice
- Advertisement -

மூதேவி குடிகொண்டிருக்கும் இடத்தில் வறுமையும் கஷ்டமும் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை. ஒரு வீட்டில் மூதேவி அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். வீட்டில் மூதேவி குடி கொண்டிருந்தால் அந்த வீட்டில் என்னென்ன அறிகுறிகள் தெரியும். மூதேவியை நம் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. இந்த மூன்று கேள்விகளுக்குமான விடையை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

lazy

எந்த ஒரு வேலையையும் உடனடியாக செய்து முடிக்காமல் பிறகு செய்துகொள்ளலாம் என்று சோம்பேறி தனத்தோடு இருக்கின்றார்களோ அந்த வீட்டில் நிச்சயமாக மூதேவி குடி கொண்டு இருப்பாள். சோம்பேறித்தனம், இயலாமை இவை அனைத்துமே மூதேவி வீட்டில் குடி கொள்ளப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். எவரொருவர் சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கின்றார்களோ அந்த வீட்டில், அந்த இடத்தில் நிச்சயமாக மூதேவி குடிகொண்டு இருக்க மாட்டாள்.

- Advertisement -

அடுத்தபடியாக எந்த வீட்டில் அடிக்கடி சமைக்கும்போது சமைத்த பொருட்கள் கருகி விடுகின்றதோ, அந்த வீட்டில் மூதேவி குடி இருப்பதாக அர்த்தம். சமைக்கின்ற பொருளை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய அலட்சியத்தால் அடிக்கடி பொங்க விடக்கூடாது. ஏதோ ஒரு சமயம் எதிர்பாராமல், பால் பொங்கி விட்டது, பருப்பு கருகிவிட்டது, குழம்பு தீய்ந்து விட்டது என்றால் பரவாயில்லை. அடிக்கடி தீய்ந்த வாடை ஒரு வீட்டில் வீசவே கூடாது. இதுவும் மூதேவி வீட்டில் குடியேற போகின்றாள் என்பதற்கான அறிகுறிதான்.

clay-pot-cooking

சரி, எப்படி தான் நாம் ஜாக்கிரதையாக இருந்தால் கூட நம் வீட்டு சமையலறையில் அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தினால் சமைக்கும் பொருட்கள் தீய்ந்து போய்க் கொண்டே இருக்கின்றது. இந்த தோஷத்தை நீக்க என்ன செய்யலாம். சமையலறையில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் அளவு பச்சரிசியை வைத்துவிட்டு, அந்த பச்சரிசிக்கு பக்கத்தில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து குலதெய்வத்தை வேண்டி அந்த கற்பூரத்தை ஏற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் அடிக்கடி இந்த கருகிய வாடை வரக்கூடாது சமைக்கும்போது பொருட்கள் தீய்ந்து போக விடக்கூடாது என்று அன்னபூர்ணியை மனதார இப்படி பிரார்த்தனை செய்துகொண்டால் உங்களுடைய வீட்டில் நீங்கள் சமைக்கும் போது அடிக்கடி சமைக்கும் பொருட்கள் கருகாமல் இருக்கும். கற்பூரத்தை பற்ற வைக்கும்போது பாத்து பற்ற வைக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் பக்கத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் அந்த பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டு விடலாம்.

samayal

அடுத்தபடியாக நிலை வாசலுக்குள் மூதேவி நுழையாமல் இருக்க வேண்டும் என்றால் நிலை வாசலில் எப்போதுமே பச்சை நிறத்தில் பச்சை மிளகாய், பச்சை நிற எலுமிச்சை பழமும் திருஷ்டிக்காக கட்டி வைக்க வேண்டும். அதிகப்படியான புளிப்பு சுவையும், அதிகப்படியான காரமும் மூதேவிக்கு பிடித்தமான ஒரு பொருள். உங்களுடைய வீட்டிற்குள் மூதேவி நுழைய வரும்போது அவளுக்கு பிடித்த பொருளை பார்த்தவுடன், அந்த பொருளை மூதேவியாகப்பட்டவள் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு, நிலை வாசலில் இருந்து வெளியில் சென்று விடுவாள். வீட்டிற்குள் நுழைய மாட்டாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்குள் மூதேவி நுழையாமல் இருக்க, மேல் சொன்ன விஷயங்களை கடைபிடித்து பாருங்கள். வீட்டிற்குள் கஷ்டம் நிரந்தரமாகத் தங்காது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -