வீடு துடைக்க இது செம்ம ஐடியாவா இருக்கே! 24 மணி நேரமும் உங்கள் வீடு வாசமாக, ஈ, எறும்பு, கொசு, கரப்பான் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.

mop
- Advertisement -

வீட்டை சுத்தமாக கூட்டி மாப் போடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் தான் இந்த கஷ்டம் தெரியும். வாரத்தில் ஒரு நாள் நீங்கள் வீட்டை மாப் போட்டாலும் சரி, அல்லது இரண்டு நாள் மாப் போட்டாலும் சரி பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய டைல்ஸ் 24 மணி நேரமும் பளிச்சு பளிச்சென இருக்கும். அதே சமயம் டைல்ஸின் ஓரங்களில் எறும்பு ஈ கொசு தொல்லை வராமலும் இருக்கும்.  வீட்டை துடைத்து முடித்த பின்பு பார்த்தால் வீடு பட்டை பட்டையாக அப்படியே துடைத்த அடையாளம் தெரியும் அல்லவா. அந்த அடையாளம் தெரியாமல் இருக்க ஒரு டிப்ஸும் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

முதல் குறிப்பு:
வீட்டை துடைப்பதற்கு முன்பாக ஒரு தூசு தட்டும் ஒட்டடை குச்சியை வைத்து, உங்கள் வீட்டின் மூளை முடுக்குகளை ஒரு முறை சுத்தம் செய்து விடுங்கள். மூளை முடுக்குகளில் தூசு தும்பு ஒட்டடை இருந்தாலும் கொசு அதிகமாக சேரும். அதன் பின்பு தரையை சுத்தமாக கூட்டி விட வேண்டும். தரையை என்னதான் சுத்தமாக கூட்டினாலும் தரையில் இருக்கும் முடி மட்டும் சரியாக சுத்தமாகாது. மாப் போடும், முடி ஒட்டி ஒரு பெரிய தொல்லையை கொடுக்கும்.

- Advertisement -

வீட்டை கூட்டும் போது துடைப்பத்தில், சின்ன சின்னதாக டேப்பை வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது துடைப்பம் தரையில் படும் இடத்தில் இந்த டேப் இருக்க வேண்டும். டேப்பின் பசை பகுதி கீழ் பக்கம் தரையை தொடுமாறு இருக்கும் படி ஒட்ட வேண்டும். டேப்பை ரவுண்டாக சுற்றி துடைப்பத்தில் ஒட்டி விட்டால், அந்த டேப்பில் உள்ள பசையில், கூட்டும்போது முடியை எல்லாம் ஒட்டிக் கொள்ளும். தொடப்பத்தில் இருந்து டேப்பை எடுத்து குப்பையில் சுலபமாக போட்டு விடலாம். இப்படி சுத்தமாக கூட்டி விட்டால் துடைக்கும் போது முடி பிரச்சனை வராது. (கிஃப்ட் பேக் பண்ணும் போது, லேபிள் ஒட்ட டேப்பை சுருட்டி ஒட்டுவோம் அல்லவா, அதே போல தான் இதுவும்.)

இரண்டாவது குறிப்பு:
மாப் போடும்போது ஃபேன் போடாதீங்க. மாப் போட்டு தரை தானாகவே காய வேண்டும். சிறிது நேரம் கழித்து ஃபேன் போட்டு விடுங்கள். வீடு துடைக்கும் போதே ஃபேன் காற்று வீசிக் கொண்டு இருந்தால், நாம் மாப் போட்ட பின்பு பட்டை பட்டையாக ஆங்காங்கே கோடுகள் தண்ணீர் அச்சு தெரியத்தான் செய்யும்.

- Advertisement -

மூன்றாவது குறிப்பு:
பக்கெட்டில் வீடு துடைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, டெட்டால் 1 மூடி, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் 1 மூடி, ஷாம்பூ 1/4 ஸ்பூன், ரச கற்பூரம் 2 நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் நன்றாக கரைத்து விட்டு இந்த தண்ணீரைக் கொண்டு ஒரே ஒருமுறை மாப் போட்டாலே உங்கள் வீடு பளிச் பளிச்சென வாசமாக மாறிவிடும்.

லைசால் போன்ற எந்த பிராண்ட் லிக்விடை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். உங்கள் தலைக்கு போடும் எந்த ப்ரான்ட் ஷாம்புவை வீடு துடைக்க பயன்படுத்தினாலும் டைல்ஸ் பளபளப்பாக இருக்கும். அந்து உருண்டை, பூச்சி உருண்டை, ரச கற்பூரம் என்று சொல்லப்படும் இதை தண்ணீரோடு சேர்த்து வீட்டில் மாப் போட்டால் பூச்சிகள் பிரச்சனை நிச்சயம் வராது. இதனுடைய வாசனை வீடு முழுவதும் எப்போதும் நிறைவாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை ஜவ்வாது கூட இந்த தண்ணீரில் கலந்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

நான்காவது குறிப்பு:
வீட்டை துடைத்து விட்டு உங்களுடைய மாப்பை நல்ல தண்ணீரில் ஊற்றி அலசி விட்டு கட்டாயமாக வெயிலில் காய வைக்க வேண்டும். ஈரமான மாபை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு, மீண்டும் அதை தண்ணீரில் நனைத்து வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் எந்த பிரயோஜனமும் இருக்காது. ஈர மாபில் இருக்கக்கூடிய கிருமி உங்கள் வீடு முழுவதும் மீண்டும் பரவத்தான் செய்யும்.

- Advertisement -