வீடு துடைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த பொருளை கலந்தால் போதும். 10 நாட்கள் ஆனாலும் டைல்ஸில் அழுக்கு ஓட்டவே ஒட்டாது.

mop
- Advertisement -

உங்க வீட்டு தரை எப்போதும் சுத்தமாக பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்குதா. வீடு துடைத்த இரண்டு நாட்களிலேயே தரையில் இருக்கும் டைல்ஸ் அழுக்காக மாறுகிறதா. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரையில் பென்சில் வைத்து ஸ்கெட்ச் வைத்து கிரையான்ஸ் வைத்து எழுதி விளையாடுவார்களா. அப்படிப்பட்ட கறைகளை சுலபமாக நீக்க முடியவில்லையா. துடைத்த பின்பு டயல்ஸில் அழுக்கு சீக்கிரம் ஒட்டாமல் இருப்பதற்கு ஒரு குறிப்பு, குழந்தைகள் தரையில் கிறுக்கி வைத்த, கிறுக்கல்களை சுலபமாக துடைக்க ஒரு சின்ன குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை இறுதிவரை படித்து பலன் பெறலாம்.

தரையில் இருக்கும் கறைகளை சுலபமாக போக்குவதற்கு ஒரு வழி. குறிப்பாக பென்சில் எழுதியது, க்ரேயான்ஸில் எழுதியது, ஸ்கெட்ச் பென்சிலில் எழுதியது இவைகளை எல்லாம் சுத்தம் செய்ய இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, ஆப்ப சோடா 1 டேபிள்ஸ்பூன், பல் தேய்க்கும் பேஸ்ட் 1/2 டேபிள்ஸ்பூன் இந்த பொருட்களை போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான லிக்விட் தயார்.

- Advertisement -

இந்த லிக்விடை உங்களுடைய டயல்ஸில் எங்கு எல்லாம் கறை இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் தெளித்து விட வேண்டும். டைல்ஸ் முழுவதும் தெளித்துவிட்டால் கூட தவறு கிடையாது. ஒரு மாப் எடுத்து வந்து இந்த தண்ணீர் தெளித்த இடங்களை எல்லாம் அப்படியே துடைத்து வரும்போது, தரையில் இருக்கும் அந்த கறைகளும் சுத்தமாக நீங்கிவிடும். குறிப்பாக குழந்தைகளால் கிறுக்கப்பட்ட எல்லா கிறுக்கல்களும் சுலபமாக நீங்கிவிடும். சில தரைகளில் சாப்பிடும் போது குழந்தைகள் சிந்திய குழம்பு கறை எல்லாம் கூட ஒட்டி இருக்கும். அதையெல்லாம் நீங்கவும் இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி விடாப்பிடியான கறையை நீக்கி விட்டீர்கள். அடுத்தபடியாக நம் வீட்டை துடைக்க வேண்டும். எப்போதும் போல அரை பக்கெட் அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு 1 மூடி டெட்டால் மட்டும் சேர்த்தால் கூட போதும், அல்லது உங்களுக்கு தேவை என்றால் வீடு துடைக்கும் லிக்விட் ஏதாவது ஒன்றை சேர்த்து எப்போதும் போல வீட்டை துடைத்து விடுங்கள்.

- Advertisement -

வீடு துடைக்கும் போது ஃபேன் போடக்கூடாது. பேன் போட்டால் வீடு துடைத்த அடையாளம் பட்டை பட்டையாக ஆங்காங்கே தெரியும். வீட்டையே மாப் போட்டு முடித்து விட்டோம். இறுதியாக ஒரு சிறிய பௌலில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் உங்கள் தலைக்கு போடும் கண்டிஷனர் எந்த கண்டிஷனராக இருந்தாலும் சரி 1 ஸ்பூன் அளவு ஒற்றி கலக்க வேண்டும். கண்டிஷனர் கலந்த தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்துவிட்டு மாப் போட்டு விட்டால் உங்களுடைய டைல்ஸ் பார்ப்பதற்கு பளிங்குகள் போல ஜொலிக்கும்.

அதேசமயம் பிசுபிசுப்பாக கால் டயல்ஸில் ஒட்டாது. நீண்ட நாட்களுக்கு அழுக்கு உங்களுடைய டயசில் ஒட்டி பிடிக்காமல் கறை பிடிக்காமல் புத்தம் புதியதாகவே இருக்கும். வீடு துடைத்து ஒரு வாரம் ஆனாலும் வீட்டில் நிறைய அழுக்கு வந்து சேராது. இந்த கண்டிஷனரை வைத்து இறுதியாக உங்களுடைய வீட்டில் மாப் போட்டு ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு ஒர்க்கவுட் ஆச்சுன்னா, இந்த குறிப்பு பிடித்திருந்ததுனா, இதையே மெயின்டைன் பண்ணிக்கலாம். எந்த நேரமும் உங்கள் டயல்ஸ் மட்டும் பல பலப்பாக இருக்கும்.

- Advertisement -