சுவையான மோர் ரசம் 5 நிமிடத்தில் எப்படி வைப்பது? மோரில் ரசம் மட்டும் இப்படி வச்சு பாருங்க எல்லோரும் உங்களை பாராட்டுவாங்க!

- Advertisement -

சாதாரணமாக ரசம் சாதம் சாப்பிட்ட பிறகு, மோர் சாதம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இதை மோர் ரசம் என்று கூறுவார்கள். மோரிலேயே ரசத்திற்கு சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்து செய்யப்படுவது தான் இந்த மோர் ரசம்! ரொம்ப சுவையாக இருக்கக் கூடிய இந்த மோர் ரசத்தை செய்வதற்கு நேரமும் அதிகம் எடுக்கப் போவதில்லை. ஐந்து நிமிடத்தில் சுவையான மோர் ரசம் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

மோர் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் – அரை லிட்டர், அரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – ஐந்து, மோர் மிளகாய் – மூன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

மோர் ரசம் செய்முறை விளக்கம்:
மோர் ரசம் செய்வதற்கு முதலில் அரை லிட்டர் அளவிற்கு தயிரை கெட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை மோர் போல தயிர் கடையும் மத்தை கொண்டு நன்கு கடைந்து கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் நைசாக கடைந்ததும் இதனுடன் ரெண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மத்து போட்டு கடைவது கடினம் என்று நினைப்பவர்கள் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால் சுலபமாக மோர் கடைந்து விடும். மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலி சூடானதும் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். ரசம் என்றாலே மிளகு, சீரகம் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். எனவே இது மோர் ரசம் என்பதால் மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். உப்புடன் மோரில் ஊற வைத்த மோர் மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டதும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

பின்னர் தாளித்தவற்றை மோருடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இப்போது நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை பிரெஷ் ஆக சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதான், மோர் ரசம் ரெடி! சூப்பரான இந்த மோர் ரசம் செய்வதற்கு ஐந்து நிமிடம் கூட ஆகாது. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி மோர் ரசம் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -