10 நிமிடத்தில் பேக்கரி ஸ்டைலில் பட்டர் முறுக்கு இப்படி செஞ்சு பாருங்களேன். முறுக்கு கடிக்காமலே கரைந்து தொண்டைக்குள் போகும்.

murukku
- Advertisement -

வாயில் இந்த முறுக்கை வைத்த உடன் அப்படியே கரைந்து உள்ளே இறங்கிவிடும். கஷ்டப்பட்டு கடித்து சாப்பிட வேண்டும் என்று அவசியமே கிடைக்காது. ஆனால் முறுக்கு மொறு மொறு என்று தான் இருக்கும். வெண்ணெய் சேர்த்து செய்திருப்பதால் சாஃப்ட்டான மொறுமொறுப்பு இருக்கும். அப்படி ஒரு தனி சுவை இந்த முறுக்கிற்க்கு. மிக மிக சுலபமான முறையில் அரிசி மாவை வைத்து வெண்ணெய் சேர்த்து பட்டர் முறுக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒருமுறை இந்த முறுக்கு ரெசிப்பியை ட்ரை பண்ணி பாருங்க. விடவே மாட்டீங்க. மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள்.

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் அளவு அரிசி மாவு போட்டுக்கொள்ள வேண்டும். 1/4 கப் அளவு பொட்டுக்கடலை மாவு, உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக உங்கள் கையை கொண்டு கலந்து விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை ஊற்றி நன்றாக உருக்கி சூடாக இருக்கும் அந்த வெண்ணெயை தயாராக இருக்கும் மாவில் கொட்டி ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு உங்களுடைய கையை கொண்டு கட்டிகள் இல்லாமல் மாவை பிசைந்து விடுங்கள். மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெயை காய்ச்சாமல் அப்படியே ரூம் டெம்பரேச்சர் இருக்கும் வெண்ணையை இந்த மாவில் போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து விட வேண்டும்.

இப்போது பிசைந்த கட்டிகள் இல்லாத இந்த மாவை எடுத்து அப்படியே கைகளில் உருண்டை பிடித்தால் புட்டு மாவு பிடிப்பது போல உதிராமல் இருக்க வேண்டும். அந்த பக்குவம் வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். முறுக்கு குழாயில் முள்ளு முறுக்கு அச்சு போட்டு உள்ளே எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிசைந்த இந்த மாவை தேவையான அளவு எடுத்து உருட்டி முறுக்கு அச்சில் போட்டு, சுட சுட காய்ந்திருக்கும் எண்ணெயில் அப்படியே முறுக்கு பிழிந்து விட வேண்டியதுதான். தேவைப்பட்டால் உங்களுக்கு முறுக்கு வடிவத்திலும், அழகாக வட்ட வடிவிலும் இந்த முருங்கை சுட்டு எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் அப்படியே சிறிய சிறிய முறுக்கு துண்டுகளாகவும் எண்ணெயில் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

இந்த முறுக்கு பிரவுன் நிறத்திற்கு சிவந்து வரக்கூடாது. வெள்ளை நிறத்திலேயே தான் இருக்கும். எண்ணெயில் முறுக்கின் சிடசிடப்பு அடங்கியவுடன், எண்ணெயில் இருந்து எடுத்து விடுங்கள். நன்றாக ஆறிய பின்பு இந்த முறுக்கை சுவைத்து பார்த்தால் இதனுடைய சுவை சொல்வதற்கு வார்த்தை இருக்காது. அப்படி ஒரு வித்தியாசமான சுவை இருக்கும். நீங்க வேணும்னா மேலே சொன்ன அளவுகளில் ஒரு முறை இந்த முறுக்கு ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரான பட்டர் முறுக்கு வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -