சாப்பிட எதுவும் இல்லாமல் போர் அடிக்கிறதா? ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும் இப்படி அசத்தலான வெங்காயம் போண்டாவை உடனே செய்திடலாம்

bonda
- Advertisement -

சில சமயங்களில் வீட்டில் பலகாரங்கள் இருந்தாலும் அவற்றை சாப்பிட பிடிக்காமல் ஏதாவது ஒரு உணவை சுடச்சுட சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி நினைத்த உடனே செய்யக்கூடிய ஒரு சில உணவு வகைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சட்டென செய்ய முடியும். அப்படி அதிகமாக அனைவரது வீட்டிலும் செய்யக்கூடியது பஜ்ஜி, போண்டா இவைகள் தான். இவற்றைச் செய்வதற்கு நேரமும் அதிகமாக தேவைப்படாது. அதிலும் சுடச்சுட சாப்பிட இவைகள் மிகவும் அசத்தலாக இருக்கும். கொஞ்சம் காரத்துடனும், கொஞ்சம் மொறுமொறு சுவையுடனும் மிகவும் அற்புதமாக இருக்கும். பெரும்பாலும் இவற்றை அரிசி மாவில் தான் அனைவரும் செய்வர். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் இந்த கோதுமை மாவு போண்டாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர், சோடா உப்பு – கால் ஸ்பூன், அரிசி மாவு – 11/2 ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 2 பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை சேர்க்க வேண்டும். அதனுடன் கால் ஸ்பூன் சோடா உப்பு மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் வற மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொண்டு, இந்த மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பாதி அளவு பிசைந்ததும் கோதுமை மாவுடன் ஒன்றரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த அரிசி மாவு சேர்த்தால் ம

பிறகு இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவை போண்டா மாவு பதத்திற்கு கலந்து விட்ட பிறகு, அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக போண்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் அனைத்து போண்டாவும் சிவந்து வந்ததும் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து, சுடச்சுட பரிமாறி கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -