வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட இப்படி மொறு மொறு முறுக்கை சுவையாக செய்து கொடுத்தால் போதும். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்

murukku
- Advertisement -

முறுக்கு மொறு மொறுபான சிற்றுண்டி வகை, குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும். இதில் பலவிதங்கள் உண்டு, உளுந்து முறுக்கு, பொட்டு கடலை முறுக்கு, தேங்காய்பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு. இப்பொழுது உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு சுவையான உளுந்து முறுக்கு செய்வதை காணலாம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு  – 2 கப், வெள்ளை உளுந்து  – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/4 கப்,
பெருங்காயத்தூள்  – 1/4 ஸ்பூன், வெள்ளை எள்  – 1 ஸ்பூன், வெண்ணை  – 2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை:
ஒரு வாணலியில் 1/2 கப் வெள்ளை உளுந்து சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து 2 லிருந்து 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்க வேண்டும். அதனை ஓரளவுக்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை  சலித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு,  1/4 கப் பொட்டுக்கடலை மாவு, 1 ஸ்பூன் வெள்ளை எள் , 2 ஸ்பூன் வெண்ணெய், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் முறுக்கு உரலில் ஸ்டார் அச்சு வைத்து  எண்ணெய் தடவிக் கொள்ளவும். முறுக்கு மாவை சேர்த்து உரலை டைட்டாக மூடி விட வேண்டும். ஒரு கரண்டி அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொண்டு, அதன் மீது மெதுவாக பிழிந்து கொள்ளவும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடு படுத்த வேண்டும். பிறகு சூடான எண்ணெயில் முறுக்கை பொரிக்க வேண்டும். 3 நிமிடங்களுக்குப் பிறகு திருப்பி போட வேண்டும். நுரை அடங்கிய பிறகு முருங்கை எண்ணெயில் இருந்து எடுத்து விடவும். பிறகு ஆறவைத்து ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும். 1 வாரம் வரை மொறுமொறுப்பாக இருக்கும். உளுத்தம்பருப்பை வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதே சமயத்தில் உளுந்து நிறம் மாறாமல் லேசான பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும்.

முறுக்கு செய்து ஓரளவு ஆறிய பின்னர் ஏர் டைட் கன்டெய்னரில் மாற்றி மூடிவைக்கவும், இதனால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொண்டால் முறுக்கு காரமாகவும், சுவையாகவும் இருக்கும். வெள்ளை எள் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு கருப்பு எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் இப்படி சுவையான முறுக்கு செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து சுவைத்து பாருங்கள்.

- Advertisement -