மொறு மொறுன்னு தட்டை செய்வது இவ்வளவு ஈஸியா? தட்டை பிரியர்களுக்கு சுலபமான முறையில் அதன் தயாரிப்பு முறை!

rice-flour-thattai_tamil
- Advertisement -

முறுக்கு, சீடை, தட்டை என்று வரிசை கட்டி சாப்பிட்டு பல நாட்கள் ஆகியவர்களுக்கு இந்த தட்டை ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம். கொஞ்சம் அரிசி மாவும், பொட்டுக் கடலை மாவு இருந்தால் சட்டுன்னு கிரிஸ்பியான மொறு மொறு தட்டை வடை தயார் செய்து விடலாம். சுவையான தட்டை வடை ரெசிபி எப்படி செய்வது? என்று தொடர்ந்து காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – இரண்டு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒன்றரை ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – நான்கு பல், அரிசி மாவு – ஒரு கப், கடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – ரெண்டு சிட்டிகை, சூடான எண்ணெய் – ஒரு சிறு குழி கரண்டி, கருவேப்பிலை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

தட்டை செய்வதற்கு முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த மாவை சலிக்கும் சல்லடையில் போட்டு சலித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு கடலைப் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை வெறும் வாணலியில் மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸிங் பவுலில் சலித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு சேர்த்து, வறுத்து வைத்துள்ள அரிசி மாவையும் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அரைத்த மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து, அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகாய் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள கடலை பருப்பை முழுதாக அப்படியே சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலையை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழி கரண்டி அளவிற்கு எண்ணெயை சூடாக்கி இதனுடன் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை இலை போன்றவற்றில் கொஞ்சமாக எண்ணெயை தடவி அதன் மீது மாவை வைத்து தட்டையாக தட்டுவதற்கு ஏதாவது ஒரு டம்ளர் அல்லது பாத்திரத்தை பயன்படுத்துங்கள். வாழை இலை அல்லது பாலித்தீன் கவரால் மூடி மாவின் மீது வைத்து நன்கு அழுத்தம் கொடுத்தால் தட்டையாக வந்து விடும். அதன் பிறகு நீங்கள் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
3 விசிலில் குக்கரில் அனைவரும் விரும்பும் சுவையில் அருமையான தேங்காய் பால் சாதம் ஈசியாக செய்வது எப்படி?

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தட்டைகளாக மெதுவாக போட்டு பொறுமையாக பொரித்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் உள்ளேயும் வெளியேயும் நன்கு மொறுமொறுன்னு சிவக்க வறுபட்டு வரும். அவ்வளவுதாங்க, ரொம்பவே ருசியான இந்த தட்டை ரெசிபி மொறு மொறுன்னு உடைத்தால் கிரிஸ்பியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க நீங்களும் அசத்துங்க.

- Advertisement -