உங்களுக்கு கோதுமை தோசை மொறுமொறுன்னு வார்க்க வரலியா? அப்போ இந்த மாறி ஒருமுறை சுட்டு பாருங்க ரேஷன் கோதுமையில் கூட கிரிஸ்ப்பியான தோசை வரும்.

wheat-dosai_tamil
- Advertisement -

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை மொறுமொறுவென்று வருவது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே கிரிஸ்பியான தோசை சுவையான ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். அந்த வகையில் கோதுமை தோசை மொறுமொறுவென்று ஹோட்டலில் சுடுவது போல கிரிஸ்பியாக வருவதற்கு எளிதான முறையில் எப்படி கோதுமை தோசை மாவை தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 400 கிராம், அரிசி மாவு – 100 கிராம், தயிர் – 100ml, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சிரகம் – அரை டீஸ்பூன், தண்ணீர் – 500ml.

- Advertisement -

கோதுமை தோசை செய்முறை விளக்கம்:
கோதுமை தோசை செய்வதற்கு முதலில் 400 கிராம் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் அரைத்த கோதுமை மாவு, கடையில் வாங்கிய கோதுமை மாவு, ரேஷனில் அரைத்த கோதுமை மாவு எதுவாக இருந்தாலும் இப்படி செய்யும் பொழுது மொறு மொறுவென்று கிரிஸ்ப்பியாக வார்க்க வரும்.

400 கிராம் கோதுமை மாவுடன், 100 கிராம் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. கோதுமை மாவை மட்டுமே வைத்து தோசை சுடுவதை விட, இது போல நான்கில் ஒரு பங்கு அரிசி மாவு சேர்த்து செய்யும் பொழுது மெல்லியதாக தோசை வார்க்க வரும். இதனுடன் தோசை மிருதுவாகவும், சுவையாகவும் வருவதற்கு ஒரு கப் அளவிற்கு அதாவது 100ml கெட்டியான தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு பெரிய மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மேற்கூறிய அளவின்படி 500ml தண்ணீர் சேர்த்து நைசாக ஸ்மூத்தி போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். கட்டிகள் இல்லாமல் அரைத்து எடுத்த இந்த மாவுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சீராகத்தை கைகளால் நன்கு கசக்கி தேய்த்து சேர்க்க வேண்டும். எந்த ஒரு கோதுமை தோசைக்கும் சீரகம் சேர்க்கும் பொழுது சுவையும், அதன் மணமும் தூக்கலாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
காரசாரமா செட்டிநாட்டு ஸ்டைலில் சின்ன வெங்காய காரச் சட்னி. இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தா காரமே சாப்பிடாதவங்க கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சுற்றிலும் எண்ணெயை தேய்த்துக் கொள்ளுங்கள். கோதுமை தோசை மாவை எடுத்து ரவா தோசை செய்வது போல சுற்றிலும் மாவை விட்டு நடுவில் பரப்பி விட வேண்டும். சாதாரண தோசை சுடுவது போல மாவை நடுவில் ஊற்றி சுற்றிலுமாக பரப்பி விடக்கூடாது. இப்படி சுட்டால் தான் கோதுமை தோசை ரெசிபி மொறு மொறுவென்று வரும். இப்போது சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் நன்கு சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக விடுங்கள். அவ்வளவுதாங்க, இதே மாதிரி நீங்களும் கோதுமை தோசை வார்த்து தான் பாருங்களேன், இனி எப்போதும் தோசை மாவுக்கு கஷ்டப்படவே வேணாம்.

- Advertisement -