நிறைய பேர் வீடுகளில் முன்னோருக்கு செய்யக்கூடிய வழிபாடுகளில் சில குறைபாடுகள் இருக்கும். சில உயிர்கள் உடலைவிட்டு பிரிந்த பின்பு, நேராக மோட்சத்திற்கு செல்வதில் இடையூறுகள் இருக்கும். நம்முடைய குடும்பத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையாமல், மோட்சத்துக்கு செல்லாமல் இருந்தால், அது நம்முடைய குடும்பத்திற்கு நல்லது கிடையாது. இதன் மூலம் குடும்பத்தில் தொடர்ந்து பல கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் இப்படி ஒரு கஷ்டம் இருப்பது நமக்கு தெரிந்திருக்கும். நம்முடைய வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்துகொண்டே இருந்தால், நம்முடைய ஜாதகத்தைக் கொண்டு போய் ஜோசியரிடம் காண்பித்தால் அவர்களே சொல்லிவிடுவார்கள். உங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வில்லை, மோட்சத்திற்கு செல்லவில்லை, இதனால்தான் உங்களுடைய குடும்பத்திற்கு பிரச்சனையாக உள்ளது என்று.

இப்படி மோட்சத்திற்கு செல்ல முடியாமல் பூமியில் உலாவிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை நேரடியாக மோட்சத்திற்கு அனுப்பி வைப்பது எப்படி. நம்முடைய வீட்டில் இந்த மோட்ச தீபத்தை ஏற்றி இறந்தவர்களை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், அவர்கள் மோட்சத்திற்கு செல்லக்கூடிய தடைகள் தகர்க்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மோட்ச தீபத்தை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்ற வேண்டும் தெரிந்து கொள்வோமா.
ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயில் ஒரே ஒரு பூண்டு போட்டு விட்டு, பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபத்தை வீட்டின் ஈசானிய மூலை அல்லது நிருதி மூலையில் ஏற்ற வேண்டும்.

எந்தக் கிழமையில் எப்போது உங்களுக்கு சவுகர்யமாக இருக்கிறதோ அப்போது இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமென்று அந்த எம்பெருமான் ஈசனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் உயிரிழந்த ஆத்மாக்கள் இந்த பூமியில் உலாவி கொண்டிருந்தால் கூட அந்த ஆத்மாக்கள் நேரடியாக மோட்சத்தை அடைந்து விடும்.
பெரும்பாலும் இந்த தீபத்தை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. பூண்டு போட்டு தீபம் ஏற்றும் பழக்கத்தைப் பற்றி இதுவரை நாம் கேள்வி கூட இருக்க மாட்டோம். அந்த காலத்தில், சில குறிப்புகளில் இந்த தீபத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுவதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு எந்த ஒரு கெடுதலும் நடக்காது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். வீட்டில் தொடர் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். (இறந்த முன்னோர்களை நினைத்து ஒரே ஒருமுறை இந்த தீபத்தை ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் ஏற்றினால் போதும்.)

ஒரு வீட்டின் ஈசானிய மூலை என்பது வடகிழக்கு பகுதியாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் நிருதி மூலை தென்மேற்கு பகுதியாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய குடும்பத்திலும், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருக்கின்றது. அதனால் தான் உங்களுடைய வீட்டில் சில தொந்தரவுகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். நல்லதே நடக்கும்.