அட! இந்த லட்டு செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! பூந்தி கூட பொறிக்க வேண்டாமா?

lattu5

லட்டு என்றாலே, அதை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். கடைகளில் வாங்கி சாப்பிடும் அதே சுவையில், அதே கலரில் அழகான லட்டுவை நம் வீட்டிலேயே, நம் கையாலேயே செய்து நம் குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். குறிப்பாக, ஆரஞ்சு வண்ணத்தில் மோத்திசூர் லட்டு என்று கடைகளில் விற்கும், அந்த லட்டுவை நம் வீட்டிலேயே, பூந்தி கூட பொரிக்காமல், சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது அல்லவா?

kadalai-paruppu

Step 1:
முதலில் 1 1/2 கப் கடலை பருப்பை, அகலமான பாத்திரத்தில் போட்டு, 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். கடலை பருப்பு, பச்சை வாடை, லட்டு செய்யும்போது வரக்கூடாது என்றால், கடலைப்பருப்பை கட்டாயம், கைகளால் நிமிட கழுவ வேண்டியது அவசியம். கிராம் கணக்கில் இந்த கடலைப்பருப்பு 300 கிராம் அளவு இருக்க வேண்டும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட வேண்டும்.

Step 2:
கடலைப்பருப்பு 2 மணி நேரம் நன்றாக ஊறிய பின்பு, அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, கடலைப் பருப்பை மட்டும் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். மொழுமொழு என்று அழைக்கக்கூடாது. பக்கோடா விற்கலாம் அரைப்போம் அல்லவா? அப்படி!

lattu2

Step 3:
இப்போது அரைத்து வைத்திருக்கும் இந்த கடலைமாவு விழுதை, சிறிய சிறிய பக்கோடா உருண்டைகள் போல, கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். எண்ணெயை முதலில் நன்றாக காய வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மாவை எடுத்து சிறிய பக்கோடாக்களாக விட்டு, ஒரு நிமிடம் வரை பொரிக்க விட்டு, எடுத்தால் போதும். பகோடா சிவந்து விடக்கூடாது. மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

Step 4:
தயார் செய்து வைத்திருக்கும் பக்கோடாக்களை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பாக, மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு, அந்த பக்கோடாக்களாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உதிரி உதிரியாக, கடலை பருப்பு பக்கோடாவில், செய்த பகோடா தூள் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும். அது அப்படியே இருக்கட்டும்.(ஒன்றும் இரண்டுமாக, கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். பகோடாகலையும் போட்டு மைய அரைத்து விடக்கூடாது.)

lattu

Step 5:
1 1/2 கப் அளவு கடலைப் பருப்பை எடுத்து இருக்கிறோம் அல்லவா? அதே 1 1/2 கப் அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையையும் சேர்த்து, கலக்கி, ஒரு கம்பி பதத்திற்கு, பாகு வரும் அளவிற்கு, பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.(இந்தப் சர்க்கரைக் கரைசலில் உங்களுக்கு தேவைப்பட்டால், ஆரஞ்சு நிற கலர் பொடி அல்லது சிவப்பு நிற கலர் பொடி சேர்த்துக் கொள்ளலாம். ஏழைக்காய் வாசம் பிடித்தவர்கள், ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.)

lattu3

சர்க்கரை நன்றாகக் கொதித்து, வெள்ளை நிறத்தில் பொங்கி, வரும்போது, உங்கள் விரல்களால், தண்ணீர் தொட்டு சர்க்கரைரை பாகை தொட்டு பார்த்தீர்கள் என்றால், பிசு பிசு வென்று ஒரு கம்பி பதத்திற்கு வரும். அந்த நேரத்தில், அடுப்பை அணைத்துவிட்டு, தயாராக வைத்திருக்கும் கடலைமாவு பகோடா பொடியை, சர்க்கரை பாகோடு சேர்த்து, நன்றாக கலந்து விடவேண்டும்.

lattu4

இந்த கலவை வெதுவெதுப்பாக ஆறவேண்டும். அதற்குள் ஒரு தாளிப்பு கரண்டியில், 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு, உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து லட்டில் கொட்டி விடுங்கள். உங்களுக்கு தேவையான பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை போட்டு, தேவைப்பட்டால் பூசணி விதைகளை சேர்த்து, லட்டு விழுதை கிளறி, உருண்டை பிடித்தீர்கள் என்றால் சுவையான, சூப்பரான மோத்திசூர் லட்டு தயார்.

இதையும் படிக்கலாமே
உடலுக்கு ஆரோக்கியம் தரும் ‘ப்ரோக்கோலி கேரட் புலாவ்’ 15 நிமிடத்தில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.