உடல் வலிகளை நீக்கும் முடக்கத்தான் ரசம்

mudakathan keerai rasam
- Advertisement -

நம்முடைய வாழ்வில் நம் உண்ணக்கூடிய பல பொருட்கள் மருத்துவ குணம் மிகுந்த பொருட்களாக திகழ்கின்றன. அப்படி மருத்துவ குணம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக திகழும். அந்த வகையில் முடக்கத்தான் கீரையை வைத்து ரசம் செய்வது எப்படி என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடக்கத்தான் கீரை என்பது வாத நோய்களுக்கு மிகவும் சிறந்ததாக திகழ்கிறது. மேலும் இந்த கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய் போன்றவை நீங்கும். பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. காது வலி, மாதவிடாய் பிரச்சனை, மூட்டு வலி, கை கால் வலி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்ததாக திகழ்கிறது. மேலும் இந்தக் கீரையை தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு
  • தக்காளி – 2
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • பூண்டு – 10 பல்
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரையில் இருக்கக்கூடிய இலைகளை மட்டும் தனியாக ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சீரகம், மிளகு, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நெறி நெறி வென்று அடைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இடி கல்லை எடுத்து அதில் அலசி வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை போட்டு நன்றாக தட்டிக் கொள்ளுங்கள். இதை மைய அரைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதனுடன் பூண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஊற வைத்திருக்கும் புளியை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு தக்காளி பழத்தையும் சேர்த்து நன்றாக கைகளிலேயே மசித்து விட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் மிக்ஸி ஜாரில் அரைத்து மிளகு சீரகத்தையும் சேர்க்க வேண்டும். இடிக்கல்லில் இடித்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரை மற்றும் பூண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும் கடுகு வெந்தயமும் நன்றாக பொரிந்த பிறகு இதில் நாம் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்ற வேண்டும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். ரசம் நன்றாக நுரை கூட்டி வரும் பொழுது அதன் மேல் சிறிதளவு தண்ணீரை தெளித்து விட்டு ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை அதன் மேல் தூவி அடுப்பை அணைத்துவிட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இந்த ரசத்தில் சிறிது துவரம் பருப்பையும் வேகவைத்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறையில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நாம் ரசம் செய்து நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய வலிகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் கடையல் செய்முறை.

உடல் வலிக்கிறது என்றதுடன் பெயின் கில்லர் மாத்திரையை போடுவதற்கு பதிலாக இந்த முறையில் முடக்கத்தான் ரசத்தை வைத்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற முடியும்.

- Advertisement -