குலதெய்வம் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். இந்த கயிறை மட்டும் கையில் கட்டி பாருங்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தப்பிக்க எளிமையான வழிபாடு.

amman2
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஒரு இடத்திலிருந்து இடம்பெயர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்று தான் தங்களுடைய வேலையை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதாவது அதிகப்படியான வாகன நெரிசல், படிப்பதற்கு தொலைதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. வேலை செய்யும் அலுவலகத்திற்கும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. தினம் தினம் பல கிலோமீட்டர் பேருந்தில் பயணம், இருசக்கர வாகனத்தில் பயணம் என்று இன்றைய வாழ்க்கையே ஒரு நிரந்தரம் இல்லாத வாழ்க்கையாக மாறிவிட்டது. வீட்டிலிருந்து வெளியே செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என ஆகி விடுகிறது.

இந்த கலியுகத்தில் வரக்கூடிய பிரச்சனையில் இருந்து கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும் என்றால் குலதெய்வத்தின் அருளாசி நம்மிடம் இருக்க வேண்டும். குலதெய்வத்தின் பாதுகாப்பு நம் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும்  வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குலதெய்வம் முடி கயிறு கட்டும் முறை:
தினம் தினம் விளக்கு ஏற்றும்போது குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும். குடும்ப தலைவிக்கு இந்த பொறுப்பு கட்டாயம் இருக்கிறது. உங்கள் குலத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், தினமும் குல தெய்வத்தின் நாமத்தைச் சொல்லி விட்டுதான் குடும்ப தலைவி வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இந்த வழிபாடு குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

முடி கயிறு என்றால் நாம் எல்லோருக்கும் தெரியும். முடிச்சுகள் போட்ட கயிறு. எந்த கயிறாக இருக்கட்டும். எப்படி முடிச்சு போட்ட கயிறாக இருந்தாலும் பரவாயில்லை. அது எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடைய குலதெய்வத்திற்கு உகந்த நிறத்தில் இந்த கயிறை கட்டிக் கொண்டால் இன்னும் சிறப்பு. மஞ்சள் நிறம், பச்சை நிறம், கருப்பு, சிவப்பு நிறம் என்று எந்த முடி கயிறு இருந்தாலும் அதைக் கொண்டு போய் குலதெய்வ கோவிலில் கொடுங்கள்.

- Advertisement -

அர்ச்சகரிடம் கொடுத்தால் குலதெய்வ பாதத்தில் அந்த முடிக்கயிறு வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார். அந்த கயிறை எடுத்து வீட்டு பெரியவர்கள், அந்த குலதெய்வ கோயிலிலேயே அமர்ந்து வீட்டில் இருக்கும் மற்றவர்களுடைய கையில் கட்டி விட வேண்டும். இந்த முடி கயிறு உங்கள் குடும்ப உறுப்பினர்களை பத்திரமாக பாதுகாக்கும். எதிர்பாராமல் வரக்கூடிய ஆபத்தை கூட தடுக்கும் அளவுக்கு சக்தி இந்த கயிருக்கு உண்டு. ஆனால் எந்த ஒரு கயிறுக்கும், எந்த ஒரு எலுமிச்சம் பழமாக இருக்கட்டும், சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்தால் அதற்கு 48 நாட்கள் மட்டும்தான் பவர்.

48 நாட்கள் கழித்து பழையதை தூக்கி போட்டுவிட்டு புதுசாக இன்னொரு கயிறு மாற்ற வேண்டும். இப்படி 48 நாட்களுக்கு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியுமா. வீட்டின் அருகில் குலதெய்வ கோவில் இருந்தால் பரவாயில்லை. 48 ஒரு நாளுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது. வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது.

இதையும் படிக்கலாமே: இன்று வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த பஞ்சமி திதியில் மகாலட்சுமி தாயாருக்கு இந்த தீபத்தை ஏற்றினால் எப்பேர்பட்ட ஏழ்மையில் வாழ்பவர்களும் செல்வ செழிப்பான வாழ்வை வாழ்வது உறுதி.

வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி இந்த முடி கயிறை எடுத்து பிள்ளைகளுடைய கையில் கட்டி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருக்கும் அல்லவா அந்த படத்தில் இந்த கயிறை வைத்து எடுக்க வேண்டும்.) சில பேருடைய வேளையில் கையில் கயறு கட்டிக் கொள்ள முடியாத கட்டுப்பாடுகள் இருக்கும். அப்போது இந்த கயிறை உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். அதுவும் உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக திகழும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -