கொத்துக் கொத்தாக கொட்டும் முடி உதிர்வதை தவிர்க்க, இந்த வெந்தயம் ஒன்று மட்டும் போதும்

hair10
- Advertisement -

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முடி இருந்தால் மட்டும் தான் அழகாக தெரிய முடியும். ஆனால் இப்பொழுது இவர்கள் இருவருக்குமே முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தினால் முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை போன்றவை வர ஆரம்பிக்கிறது. இப்பொழுது தலையில் பேன் தொல்லை என்பது அவ்வளவாக இருப்பதில்லை. ஏனென்றால் கெமிக்கள் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதினால் தான் பேன் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் இது நல்லதா என்று பார்த்தால் நிச்சயம் கெடுதல் மட்டுமே கொடுக்கிறது. இதனால் தலையில் உள்ள செல்கள் பழுதடைந்து வருவதால் முடியின் வளர்ச்சி குறைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கிறது. எனவே முடிந்தவரை இயற்கையான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிக்க வேண்டும். வாருங்கள் இந்த முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்க வெந்தயம் வைத்து இயற்கையான வழியில் ஒரு நிரந்தரத் தீர்வை தெரிந்து கொள்வோம்.

இயற்கையான முறையில் முடி உதிர்வை தவிர்க்க தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 10 ஸ்பூன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – ஒன்று, விளக்கெண்ணை – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

ஹேர்பேக் செய்முறை:
முதலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் வெந்தயத்தில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, வெந்தயத்தை மட்டும் மிக்ஸி ஜாகிர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஈ கேப்ஸ்யூல் மற்றும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் இரவு படுக்கும் முன்பு தலைமுடியில் முழுவதுமாக இந்த கலவையை ஸ்பிரே செய்து, 15 நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் முடியை கொண்டை கட்டி இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு மறுநாள் காலை மைல்டான ஷாம்பு சேர்த்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

பயன்கள்:
வெந்தயத்தில் நிக்டோனிக் அமிலம் மற்றும் புரதச் சத்து அடங்கியுள்ளது. எனவே இவை உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கிறது. கழுத்து, கண் போன்ற பகுதிகளுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. இதனால் முடியின் வேர்களுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து கிடைப்பதால், முடிகள் வலுப்பெற்று முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. இதில் சேர்க்கப்படும் இ கேப்சியூல் விளக்கெண்ணெய் இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்தும் உடலை குளிர்வித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். விரைவாக முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

- Advertisement -