இந்த வெயில் காலத்தில் கூட உங்கள் முகம் கருக்காமல் தகதகவென்று பிரகாசமாக மின்ன தயிருடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து பேக் போட்டுங்கோங்க.

summer beauty
- Advertisement -

முகத்தை அழகாக பராமரிப்பது என்பது ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபடும். நம்முடைய சருமம் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்பவாறு அதன் தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா காலத்திலும் பயன்படுத்தக் கூடிய ஒரே பொருள் இந்த தயிர் தான். இப்போது இந்த வெயில் காலத்தில் உங்கள் முகம் வறட்சி அடையாமல் வெயிலினால் ஏற்படும் கருத்திட்டுக்களும் வராமல் தடுக்க, இந்த பேக் போட்டால் போதும். வாங்க அது என்ன என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெயில் காலத்தில் முக அழகை பராமரிக்க தயிர்:
இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் இதற்கு ஆரஞ்சு பழத்தை தோலை நிழலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் இப்போது அனைத்து கடைகளில் கிடைக்கிறது அப்படி வாங்கியும் பயன்படுத்தலாம். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தம் செய்து ஒரு துணி வைத்து முகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் வட்டவடிவில் தேய்த்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இந்த பேக்கை போடும் போது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது முகத்தில் இருக்கும் போது சூரிய கதிர்கள் படக் கூடாது. இது போன்ற பேக்குகளை முடிந்த அளவு இரவு உறங்குவதற்கு முன்பு போட்ட பிறகு உறங்கினால் இன்னும் அதிக பலனை பெறலாம்.

இந்த பேக்கில் பயன்படுத்தப்படும் ஆரஞ்சு தோல் கிடைக்காதவர்கள் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறை மட்டும் சேர்த்து குழைத்து பேக்காக போடலாம். ஆனால் எலுமிச்சை சாறு சேர்க்கும் போது இதை உங்கள் சருமத்திற்கு ஏற்றுக் கொள்ளுமா? என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள். ஏனென்றால் சிலருக்கு எலுமிச்சை பழச்சாறு அலர்ஜியை ஏற்படுத்தும்.

- Advertisement -

தயிர் இயற்கையாகவே முகத்தில் உள்ள இறந்த சொற்கள் அழுக்குகள் அனைத்தையும் நீக்கக்கூடிய ஒன்று தான். அது மட்டுமின்றி இந்த தயிர் முகத்தில் இருக்கும் ஈரத்தன்மை தக்க வைத்து முகம் வறட்சி அடையாமல் வைத்திருக்கும். இதனால் முகம் எப்போதும் இளமையுடன் இருக்கும். அதே போல் ஆரஞ்சு பழ தோலில் உள்ள விட்டமின் சி இதுவும் முகத்தில் உள்ள ஈரத்தன்மை குறையாமல் முகம் எப்போதும் இளமையுடனும் வெயிலினால் ஏற்படும் கருத்திட்டுக்களை போக்கவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முல்தானிமட்டியுடன் இதை சேர்த்தால் முகம் மினுமினுப்பாகுமா? கண்ணாடி போல முகம் ஜொலிக்க ஈசியான டிப்ஸ்!

இந்த பேக் எல்லா காலத்திற்கும் போடக் கூடிய ஒன்று தான். இதை வாரம் இரண்டு முறை மட்டும் போட்டு வந்தாலே போதும். இந்த வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் எந்த பாதிப்பும் வராமல் தடுத்து விடலாம் . இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த சுலபமான பாலோ பண்ணி பாருங்க.

- Advertisement -