எக்கச்சக்கமா முடி கொட்டும் பிரச்சனைக்கு, 3 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்க இதுவரை யாரும் சொல்லாத சூப்பரான ஹேர் ஸ்ப்ரே ஐடியா இதோ உங்களுக்காக.

hair8
- Advertisement -

வெயில் காலம் வந்து விட்டாலே அழுக்கு, வியர்வை, அரிப்பு, பிரச்சனை வந்து தலையில் இருக்கும் முடி கொஞ்சம் அதிகமாக கொட்டத்தான் செய்யும். ஆனால், அதே சமயம் வெயில் காலத்தில் குளிர்ச்சியான ஹேர் பேக்குகளை போட்டு முடியை வளர்ப்பதற்கு நமக்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். ஏனென்றால் வெயில் காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை தலையில் போடும்போது ஜலதோஷம் பிடிக்காது அல்லவா. முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற சுலபமான ஒரு ஹேர் ஸ்பிரே நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஹேர்பேக் போட்டால் தலைக்கு குளிக்க சிரமமாக இருக்கும். இந்த ஹேர் ஸ்ப்ரேவை அடித்துக் கொண்டால், தலைக்கு குளிக்கும் கஷ்டம் கூட இருக்காது. வாங்க அந்த சுலபமான அழகு குறிப்பு என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்த சீரம்:
ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கிரீன் டீ  இலைகள் – 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த நெல்லிக்காய் – 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு ஒன்றாக கலந்து விடுங்கள். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் கொரகொரப்பாக ஒரு பொடி கிடைக்கும்.

- Advertisement -

அந்த பொடியை அப்படியே கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முடி உதிர்வை கட்டுப்படுத்த நமக்குத் தேவையான பொடி தயார். ஒரு அகலமான பாத்திரத்தில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் இந்த பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும். தண்ணீரின் நிறம் மாறி இருக்கும். தண்ணீர் சுண்டத் தொடங்கிய அரை டம்ளர் தண்ணீராக மாறும். இந்த பொருட்களின் சத்துக்கள் எல்லாம், தண்ணீரில் இறங்கி இருக்கும். தண்ணீர் ஆறிய பின்பு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி பயன்படுத்த வேண்டும்.

இந்த தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து பத்து நிமிடம், உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து, பிறகு தேவை என்றால் வெறும் தண்ணீரை ஊற்றி, தலையை அலசிக்கொள்ளலாம். இல்லை என்றால் அப்படியே காய வைத்துக் கூட முடியை பின்னிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

- Advertisement -

இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தலையில் ஸ்ப்ரே செய்து வர ஒரு மாதத்தில் உங்களுடைய முடி உதிர்வு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். 100 முடி கொட்டும் இடத்தில் 50 மூடி கொட்ட தொடங்கும். பிறகு தலையில் முடி வளராத இடத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முடியை வளர செய்யும். அந்த அளவுக்கு சத்து நிறைந்த சீரம் தான் இது. (இந்த தண்ணீரை தேவைப்பட்டால் மூன்று நாட்கள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்யலாம்).

இதையும் படிக்கலாமே: ஆரஞ்சு தோல் இருந்தால் போதும் முகத்தை பளபளப்பாக்கலாம்.

எப்போதும் போல சொல்வதுதான். தலையில் ஹேர் பேக், ஹேர் சீரம் போடுவதற்கு எந்த அளவுக்கு கவனத்தை செலுத்துகிறீர்களோ, அதே அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதிலும் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தையும் ஒரு பக்கம் கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தோடு சேர்த்து இந்த அழகு குறிப்புகளை பின்பற்றி வந்தால் நிச்சயமாக அடர்த்தியான முடியை பெற முடியும். மேலே சொன்ன இந்த ரெமெடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -