குப்பையில் தூக்கி போடக்கூடிய ஆரஞ்சு தோல் இருந்தால் போதும். முகத்தில் எண்ணெய் வழிதல், முகப்பரு, கரும்புள்ளி இப்படி அனைத்தையும் நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றி விடலாம்.

Orange thol benefits in Tamil
- Advertisement -

பழ வகைகளில் பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை கொண்டது ஆரஞ்சு பழம். ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு, உரித்த அந்த பழத்தின் தோல்களை நன்கு காய வைத்து, அரைத்து தயாரிக்கப்படுவது தான் ஆரஞ்சு பழ தோல் பொடி. இந்த ஆரஞ்சு பழ தோல் பொடி பெண்களின் முக அழகை மேம்படுத்துவதில் முக்கிய இடம் பெறுகிறது. அந்த வகையில் ஆரஞ்சு தோல் பொடி (Orange thol benefits in Tamil) பயன்படுத்தி பெண்கள் செய்து கொள்ளக் கூடிய எளிமையான முக அழகு குறிப்புகள் பற்றி இங்க நாம் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு 1 – முகம் இளமையாக மாற
சில பெண்களின் முகம் எப்போதுமே பொலிவிழந்து காணப்படும். இப்படி டல்லாக இருக்கும் பெண்களின் முகம் பளிச்சென்று மாற, ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆரஞ்சு பழ தோல் பொடி போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பசும்பால் தயிர் போட்டு நன்கு கலக்கி, முகத்தில் நன்கு தடவி மசாஜ் செய்து ஒரு 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்துக்கு ஒரு முறை இப்படி பெண்கள் செய்து வந்தால் அவர்கள் முகத்தில் இருக்கின்ற தோலின் நிறம் பளபளப்பாக மாறும். தளர்ந்த முக தசைகள் இறுகி, முகம் இளமை தோற்றம் பெறும்.

குறிப்பு 2 – ஆரஞ்சு தோல் பொடி பேஸ் பேக்
கருத்துப் போன முகம் மீண்டும் அதன் இயல்பான நிறத்தைப் பெற இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆரஞ்சு பழ தோல் பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலந்து, ஒரு பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த பேஸ் பேக் பேஸ்ட்டை முகம் முழுவதும் நன்கு தடவி, ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு, பிறகு ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். உங்களால் எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். முகத்தில் முகப்பரு பிரச்சனைகள் கொண்ட பெண்கள் மட்டும் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தக்கூடாது.

குறிப்பு 3 – முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நீங்க
முகத்தில் எண்ணெய் வழிதல் பிரச்சனை மற்றும் கரும்புள்ளிகள், முகப்பரு போன்ற பிரச்சனைகளால் தவிக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடிய பேஸ் பேக்கை எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம். ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவு ஆரஞ்சு தோல் பொடியை எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு முல்தானி மட்டி பொடியை போட்டுக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, ஒரு பேஸ்ட் பதத்தில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆப்பிள் பேஸ் பேக் செய்வது எப்படி

பிறகு பெண்கள் தங்களின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இந்த ஃபேஸ் பேக்கை நன்கு தடவிக்கொள்ள வேண்டும். ஒரு 20 நிமிடங்களிலேயே இந்த முல்தானி மட்டி கலந்த ஆரஞ்சு பழ தோல் பொடி கலந்த பேஸ் பேக் நன்கு காய்ந்து உதிரத் தொடங்கும். அப்பொழுது சற்று இதமான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒருமுறை பெண்கள் செய்து வந்தால், அவர்களின் முகத்தில் இருக்கின்ற முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் எண்ணெய் வழிதல் போன்ற பிரச்சனைகள் தீர்ந்து, முகம் பளபளப்பாகும்.

- Advertisement -