ஷாம்புவுடன் இந்த 2 பொருளை சேர்த்து யூஸ் பண்ணி பாருங்க, ஒரு முடி கூட உங்க தலையில இருந்து இனி கொட்டவே கொட்டாது தெரியுமா?

hair-shampoo
- Advertisement -

தலை முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க கூடிய வழிகளில் எளிமையான வழியாக இந்த குறிப்பை நீங்கள் பார்க்கலாம். ஷாம்பூ பயன்படுத்தாமல் இன்றைய காலகட்டத்தில் நம்மால் இருக்கவே முடியாது. ரொம்பவும் சுலபமாக இருக்கக் கூடிய இந்த ஷாம்பூவின் பயன்பாட்டை தவிர்க்கவே முடியாதவர்கள் ஷாம்புவுடன் இந்த ரெண்டு பொருளை சேர்த்து பயன்படுத்தும் பொழுது தலைமுடி பிரச்சனையும் தீர்கிறது! ஷாம்புவால் வரக்கூடிய பாதிப்புகளும் நீங்குகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் தான் இருக்கப் போகிறது. ஷாம்புவுடன் எந்த 2 பொருட்களை நாம் சேர்த்து எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ஷாம்பூ பயன்படுத்தும் பொழுது நேரடியாக அப்படியே தலையில் தடவிக் கொள்ள கூடாது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் செயற்கை ரசாயன மூலக்கூறுகள் சென்று ஈரப்பதத்தை முற்றிலுமாக அழித்து வறட்சியை ஏற்படுத்திவிடும் அபாயம் உண்டு. தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படக்கூடிய இந்த வறட்சியினால் பொடுகு தொல்லையும் அதிகரிக்கும், எனவே ஷாம்பூ பயன்படுத்துபவர்கள் பொடுகு தொல்லைக்கு எளிதாக ஆளாகக் கூடுவார்கள்.

- Advertisement -

எனவே ஷாம்புவுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அதன் பின்பு உபயோகிப்பது தான் சரியான முறையாகும். சரி, இப்போது தலை முடி உதிர்வதை சரி செய்யக்கூடிய இந்த அற்புதமான வழிமுறைக்குள் சென்று விடுவோம். 400ml அளவிற்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் 2 ஸ்பூன் அளவிற்கு தேயிலை தூள் சேர்த்து கொள்ளுங்கள்.

ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் தேயிலையின் சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கும். அதன் பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். எலுமிச்சை பேன், பொடுகு போன்ற தொந்தரவை விரைவில் நிவர்த்தி செய்யக் கூடிய அற்புதமான மூலிகையாகும். பின்னர் இந்த கலவையுடன் நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் ஷாம்பூ எவ்வளவு தேவையோ அவ்வளவு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சுமார் 2 ஸ்பூன் அளவிற்கு ஷாம்பு கலந்து நன்கு நுரை வர அடித்து கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் தலை முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை நன்கு தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் முடியின் வேர் கால்களுக்கு நல்ல ஒரு ஈரப்பதம் கிடைத்து முடி கொட்டுதல் பிரச்சினை உடனடியாக நிறுத்தி விடும். அதன் பிறகு உங்களுடைய முடி கொட்டாமல் பாதுகாக்கப்படும். எலுமிச்சையில் இருக்கும் சத்துக்கள் பொடுகு வராமல் தடுக்கும்.

டீ தூளில் இருக்கும் நன்மைகள் உங்களுக்கு இளநரை மற்றும் முது நரையைக் கூட நீக்கும் அற்புதமான சக்தி படைத்தது. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நீங்கள் தலைக்கு குளிப்பதாக இருந்தால், நீங்கள் ஒவ்வொரு முறை ஷாம்பூ பயன்படுத்தும் பொழுதும் இந்த முறையில் தேய்த்து குளித்து வாருங்கள். கொஞ்ச காலத்திலேயே உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தெரியும். பிறகு சாதாரணமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை மட்டும் தடவி வந்தால் போதும், முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நிற்கும்.

- Advertisement -