- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉங்கள் நீண்ட நாள் முடி உதிர்வை தடுத்து புதிய முடிகள் விரைவில் வளர, இதோ கெமிக்கல்...

உங்கள் நீண்ட நாள் முடி உதிர்வை தடுத்து புதிய முடிகள் விரைவில் வளர, இதோ கெமிக்கல் இல்லாத இயற்கையான பேக்.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனைக்கு காரணம் என்று பார்த்தால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சரியான முறையில் முடியை பராமரிப்பது கிடையாது நல்ல தண்ணீர், நல்ல தூக்கம், நல்ல சுற்றுச்சூழல், இப்படி என காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதில் சிலவற்றை நாம் சரி செய்து கொள்ளலாம் பலவற்றை சரி செய்ய முடியாது. தண்ணீர் அருந்தி கொள்ளலாம். நம் முடியை நாம் பராமரித்துக் கொள்ளலாம். சரியான வகையில் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெளியில் இருக்கும் சுற்றுப்புற மாசை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக நாம் துணியில் தலை துணி போன்ற ஏதாவது கட்டிக்கொண்டு சென்றாலும், அது மூலமும் நம் உஷ்ணம் வெளியேறாமலும், வேர்வை அதிகமாக படிந்தும், அப்போதும் முடி பாதிப்படையவே செய்யும். எனவே அப்படி முடி உதிராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றியும் உதிர்த்த இடத்தில் புதிய முடிகள் வளரவும் தான் இந்த பதிவு.

இதற்கு வெந்தயம் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊற வைத்து விடுங்கள். அடுத்தது ஒரு கப் அளவு மருதாணி இலை எடுத்து காம்பு நீக்கி உருவி இலையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது செம்பருத்தி இலை இதையும் காம்பு நீக்கி நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் செம்பருத்தி பூ ஒரு நாலு அல்லது ஐந்து பூக்கள் இருந்தால் போதும். இதையும் காம்பு நீக்கி இதழ்களை தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை கலக்க தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இப்போது எடுத்து வைத்த மருதாணி இலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, இத்துடன் முதல் நாளே ஊற வைத்தவெந்தயத்தை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து இந்த இலைகளுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம். தேவைப்பட்டால் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை மட்டும் லேசாக தெளித்துக் கொண்டால் போதும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கீழே வீணாக்க வேண்டாம்.

இதை நன்றாக அரைத்த பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் அரைத்த விழுதை ஒன்றாக சேர்த்து தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த ஜாரில் அந்த வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக அலம்பி அதையும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த விழுதை தலையில் தேய்க்கும் முன் தலை சுத்தமாக குளித்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நீங்கள் ஏதாவது எண்ணெய் தேய்த்து இருந்தாலும் கூட, பரவாயில்லை இதை அப்படியே தேய்க்கலாம். உங்கள் தலைமுடி வேர்க்கால்கள், முடி என அனைத்து இடத்திலும் இந்த அரைத்த விழுதை தேய்த்துக் கொள்ளுங்கள். தேய்க்கும் போது மிகவும் கட்டியாக இருந்தால் இடை இடையே கொஞ்சம் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். தலை முழுவதும் தேய்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்தாலே போதும் அதிகம் ஊற வைக்க வேண்டாம். ஏனென்றால் வெந்தயம், மருதாணி இதையெல்லாம் அதிக குளிர்ச்சியான பொருட்கள்.இந்த விழுதை தேய்த்த அரைமணி நேரம் கழித்து நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ சீயக்காய் எது வேண்டும் ஆனாலும் சேர்த்து முடியை நன்றாக அலசி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: முகம் கழுவாமலேயே பளிச்சுன்னு இருக்க அடுப்புல பால் கொதிக்கும் பொழுது இதை மட்டும் செய்யுங்க போதும்! பொன்னிற மேனிக்கு ஹோம் டிப்ஸ்.

இந்த முறை வாரத்திற்கு ஒரு நாள் தேய்த்து குளித்து விடுங்கள். வார நாட்களில் இதை செய்வது சற்று சிரமம் எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் இதை செய்து கொள்ளுங்கள். ஒரு மாதம் இவ்வாறு செய்த பிறகு உங்களுக்கு முடி உதிர்வு முழுவதுமாக நின்றிருக்கும். அது மட்டுமின்றி புதிய முடிகளும் நன்றாக வளர்ந்திருக்கும் இதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.

சற்று முன்