- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகம் கழுவாமலேயே பளிச்சுன்னு இருக்க அடுப்புல பால் கொதிக்கும் பொழுது இதை மட்டும் செய்யுங்க போதும்!...

முகம் கழுவாமலேயே பளிச்சுன்னு இருக்க அடுப்புல பால் கொதிக்கும் பொழுது இதை மட்டும் செய்யுங்க போதும்! பொன்னிற மேனிக்கு ஹோம் டிப்ஸ்.

- Advertisement -

தினமும் காலையில் பால் கொதிக்கும் பொழுது இந்த ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டால், முகம் கழுவ கூட வேண்டாம், பளிச் பளிச்சென்று பளபளன்னு உங்க முகம் இனி மின்னும். முகப்பருக்கள், கருவளையங்கள், முக சுருக்கங்கள் என்று முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் நீக்க இந்த ஒரு விஷயத்தை தினமும் 10 நிமிடம் செய்தாலே போதும், வேற எதுவுமே வேண்டாம். உங்களுடைய முகமும் பொன் நிறத்தில் ஜொலிக்க என்ன செய்யலாம்? என்பதை இந்த அழகு குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

அழகு சார்ந்த பிரச்சனைகள் முகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. முகம் பொலிவாக இருக்கும் பொழுது நமக்குள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. முகத்தில் இருக்கும் சருமம் ரொம்பவும் மிருதுவானது. இந்த மிருதுவான சருமத்தை கடினமாக மாற்றுவது முகப்பருக்கள். இந்த முகப்பருக்களை அண்ட விடாமல் தடுக்கும் இந்த ஒரு விஷயம் பாலில் கொட்டி கிடக்கிறது.

- Advertisement -

காலையில் எழுந்ததும் பாலை காய்ச்சுவது அனைவருக்கும் வழக்கம். அப்படி காய்ச்சும் பொழுது மேலே ஆடை படரும். இந்த ஆடையை மட்டும் தனியே ஒரு ஸ்பூனை கொண்டு பிரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் எப்பொழுது வேலையில்லாமல் ஃப்ரீயாக இருக்கிறீர்களோ, அந்த சமயத்தில் பத்து நிமிடம் மட்டும் உங்கள் முகத்திற்கு என நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு ஸ்பூன் இந்த பாலாடையுடன், கால் ஸ்பூனுக்கும் குறைவாக சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு பேஸ்ட் போல முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முகம் கழுவ கூட வேண்டாம், அவ்வளவு பொலிவாக பொன் போல உங்களுடைய முகம் தோற்றமளிக்கும். இதைத் தொடர்ந்து தினமும் செய்து வர உங்களுடைய முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகள் அனைத்தும் ஒரே குறிப்பில் தீர்ந்து விட்டதை நீங்கள் காண முடியும்.

- Advertisement -

கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், சரும சேதங்கள், சரும துளைகள் போன்றவற்றை கூட சில வாரங்களிலேயே முற்றிலுமாக குணப்படுத்தி விடும் ஆற்றல் இதற்கு உண்டு. பால் ஏட்டில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு மிருதுவான தன்மையை கொடுக்கும். மேடும், பள்ளமுமாக இருக்கும் சேதம் அடைந்த சருமமும் பால் ஏட்டை கொண்டு செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக்கால் பஞ்சு போல மெத்தென்று மாறும். தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு உங்களுடைய முகத்தில் இருக்கும் சருமம் ஜொலிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்தில் வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் முளைக்குமா! ஆச்சர்யமா இருக்குல்ல? வாங்க எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்

நீங்கள் முதல் முறை செய்யும் பொழுது பிசுபிசுவென்று இருப்பது போல ஒரு உணர்வை உங்களுக்கு கொடுக்கும், ஆனால் தொடர்ந்து இதை செய்து வரும் பொழுது ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை நீங்கள் உணர முடியும். வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை துடைப்பதால் இந்த பிசுபிசுப்பு தன்மை குறையும். மேலும் முகத்தை எப்பொழுதும் இயற்கையான பொருட்களை கொண்டு பராமரிப்பது நல்லது. கண்ட கண்ட கிரீம்களை உபயோகப்படுத்தாமல் இந்த ஒரு பேக் போட்டதும் சாதாரணமாக பவுடர் போட்டுக் கொள்ளுங்கள் போதும், நீங்களா இது? என்று கண்ணாடியை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு கோல்டன் கலரில் மினு மினுவென மினுக்குவீர்கள்.

சற்று முன்