கொத்துக் கொத்தா முடி கொட்டுதேன்னு கவலைப்பட்டுட்டே இருக்காமா சட்டுன்னு இந்த வெந்தய பேக்கை ட்ரை பண்ணுங்க. இனி ஒரு முடி கூட கொட்டாமல் நல்லா கருகருன்னு நீண்டு வளரும் மேஜிக் நடக்கும்.

- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் தலைமுடி பராமரித்து வளர்ப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற சமயத்தில் வளர்ந்த கொஞ்ச முடியும் கொட்டிக் கொண்டே இருந்தால் என்ன செய்ய முடியும். இந்த கவலை இன்று பலருக்கும் உண்டு. முடி உதிர்வதற்கான எல்லா சூழ்நிலையும் இந்த காலகட்டத்தில் அமைந்து தான் இருக்கிறது. இதையும் தாண்டி முடி உதிராமல் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு இது போன்ற இயற்கையான பேக்குகளை பயன்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். அது என்னவென்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய கால சூழ்நிலையில் முடி உதிர்வு என்பது மிக மிக பெரிய பிரச்சனை தான். ஏனென்றால் உணவுப் பழக்கம் முதல் சரியான தூக்கம் இல்லாதது அதிகப்படியான மன உளைச்சல், சுற்றுச்சூழல் மாசு, முடியை சரியான முறையில் பராமரிக்காதது என காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். முதலில் முடி உதிராமல் இருக்க நாமும் கொஞ்சம் நம்முடைய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த ஒரு பேக்கையும் போடும் போது முடி உதிர்வு முற்றிலும் ஆக தடுத்து முடி நன்றாக வளரும்.

- Advertisement -

தலை முடி உதிராமல் இருக்க வெந்தய பேக்
இந்த பேக்கை தயார் செய்ய முதல் நாள் இரவே ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறு நாள் காலையில் நன்றாக ஊறிய வெந்தியத்தை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடாமல் அப்படியே வைத்திருங்கள். இப்போது இந்த வெந்தயத்துடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ கிடைத்தால் அதிலும் இரண்டு பூக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் சேர்த்து வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய பவுலில் அரைத்த இந்த வெந்திய பேஸ்ட்டை சேர்த்த பிறகு ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து பின் மீதமிருக்கும் வெந்தய தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி பேஸ்ட்டை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதில் வெந்தயம் செம்பருத்தி இலை எல்லாம் சேர்த்திருப்பதால் என்ன தான் நீங்கள் அரைத்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டு திப்பிலிகள் இருக்கும். இதை தலையில் தேய்க்கும் போது அப்படியே ஒரே இடத்தில் பிடித்துக் கொள்ளும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து தேய்க்கும் போது முடியில் நன்றாக படும்.

- Advertisement -

இப்போது கலந்த இந்த வெந்தய பேஸ்ட்டை நன்றாக முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து அரை மணி நேரம் கழித்து நீங்கள் எப்பொழுதும் போல தலைக்கு குளித்து விடுங்கள். இந்த பேக்கை தேய்த்து தலைக்கு குளிக்கும் போது நீங்கள் ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது ஒருவேளை உங்களுக்கு தேவைப்பட்டால் மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து குளித்து விடலாம்.

இந்த வெந்தயக் பேக்கை அதிகமாக முடி உதிர்வு இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறை போட வேண்டும். இதே போல ஒரு மாதம் வரை போட்டால் போதும் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனை சுத்தமாக நின்று விடும். அத்துடன் முடியும் நன்றாக வளர்வதுடன் மிருதுவாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒவ்வொரு வயது கூடும் போதும் உங்களுடைய முடியின் அழகும் கூடிக் கொண்டே செல்ல வேண்டுமா? கட்டுக்கடங்காத கருமையான கூந்தலை கொடுக்கும் கரிசலாங்கண்ணி ஹேர் பேக்.

இந்த பேக்கில் சேர்த்திருக்கும் வெந்தயம், கருவேப்பிலை, செம்பருத்தி, முட்டை அனைத்துமே முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சி அதிகமாக தூண்டக் கூடியவை. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேக் போடும் போது நிச்சயம் முடி சார்ந்த நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -