ஒவ்வொரு வயது கூடும் போதும் உங்களுடைய முடியின் அழகும் கூடிக் கொண்டே செல்ல வேண்டுமா? கட்டுக்கடங்காத கருமையான கூந்தலை கொடுக்கும் கரிசலாங்கண்ணி ஹேர் பேக்.

hair14
- Advertisement -

பொதுவாகவே ஒருவருக்கு வயது அதிகமாக ஆக, அழகும், முடி வளர்ச்சியும் குறையும். அதாவது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி 30 வயதை கடக்கும் போது இளமையும், அழகும் குறைந்து நரைமுடி வர தொடங்கும். ஒரு சிலர் 40 வயது ஆனாலும் இளமையாக இருப்பார்கள். அந்த வரம் எல்லோருக்கும் கிடைப்பது கிடையாது. உங்களுக்கும் 30 வயதை கடந்த பிறகும் கூட அழகான முடியை பெற ஆசையாக இருக்குதா. இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வந்தால், நரைமுடி பிரச்சனை தள்ளிப் போகும். உங்களுடைய வயது கூட, முடி வளர்ச்சியும் கூடிக் கொண்டே செல்லும். எளிமையான முறையில் செலவில்லாத முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக் இதோ உங்களுக்காக.

முடிவில்லா முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹேர் பேக்:
கருகருன்னு முடியை கொடுக்கக்கூடிய சக்தி இந்த கரிசலாங்கண்ணிக் கீரைக்கு உண்டு. ஆக இந்த பேக்கில் கரிசலாங்கண்ணி கீரை ரொம்ப ரொம்ப அவசியம் தேவை. சுத்தம் செய்ய கரிசலாங்கண்ணி கீரை 1 கைப்பிடி அளவு, வல்லாரை கீரை 1 கைப்பிடி அளவு, முருங்கை கீரை 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு, இந்த நான்கு கீரைகளையும் முதலில் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து கற்றாழை ஜெல் நமக்கு தேவை. சோற்றுக்கற்றாழையிலிருந்து உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து முடி வளர்ச்சி என்றாலே அதற்கு வெந்தயம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

- Advertisement -

உங்களுக்கு சளி பிடிக்காது. சைனஸ் பிரச்சனை இல்லை என்றால் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முந்தைய நாள் இரவை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். சளி பிடிக்கும் தலைவலி பிரச்சினை வரும் என்றால் இந்த வெந்தயத்தை ஸ்கிப் செய்து கொள்ளலாம். மிக்ஸி ஜாரை எடுத்து சுத்தம் செய்த 4 வகையான கீரைகளையும் போட்டுக் கொள்ளவும். அடுத்து எடுத்து வைத்திருக்கும் அலோவேரா ஜெல்லை சேர்க்கவும். ஊற வைத்திருக்கும் வெந்தயத்தை தண்ணீரோடு ஊற்றி, இதை விழுதுபோல அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

நைஸ் ஆக சூப்பரான பேக் ஒன்று கிடைத்திருக்கும் அல்லவா. அதில் 1 முட்டையை சேர்க்கலாம். மஞ்சள் கருவின்வாடை பிடிக்காதவர்கள், வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை இந்த பேக்கோடு ஊற்றி மீண்டும் ஒருமுறை கலந்தால் சூப்பரான முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக் தயார்.

- Advertisement -

நாளைக்கு காலையில் ஹேர் பேக் போடுவதாக இருந்தால், இன்று இரவு தலையில் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ளவும். காலையில் இந்த ஹேர் பேக்கை தயார் செய்து கொள்ளவும். முடியில் இருக்கும் சிக்கை எல்லாம் நீக்கிவிட்டு இந்த ஹேர் பேக்கை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி அப்ளை செய்து விடுங்கள். பிறகு கீழே இருக்கும் முடியை சிறிய சிறிய பாகங்களாக பிரித்து முடியின் எல்லா இடங்களிலும் படும்படி இந்த ஹேர் பேக்கை போட்டு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இதையும் படிக்கலாமே: முட்டையும், தயிரும் இருந்தா இனி 1 முடி கூட உங்க தலையில் இருந்து வீணாக கொட்டாது தெரியுமா? தலைமுடிக்கு ஈசி ஹேர் பேக்!

பிறகு பாருங்கள் கண்டிஷனர் போடாமலேயே உங்களுடைய தலைமுடி சில்க்கியாக மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர கருகரு முடி கண்முன்னே வளர்வதை காண முடியும். இந்த அழகு குறிப்பு பிடித்திருக்கிறது என்பவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -