முடி முதிர்வை தடுத்து, காடு போல நல்ல நீளமா கரு கருன்னு முடி வளர வாரம் தோறும் தவறாமல் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும். அப்புறம் உங்க முடி வளர்ச்சியை பார்த்து நீங்களே அசந்து போவீங்க.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சினை இப்பொழுதெல்லாம் வெகு சாதாரணமாக போய் விட்டது. ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து பத்து முடி வரை கொட்டுவது இன்றைய கால சூழலில் சாதாரணம் தான். ஒரு சிலருக்கு ஒவ்வொரு முறை தலை வாரும் போதும் தலையிலிருந்து முடி கொத்துக் கொத்தாக கொட்டும். இப்படியானவர்களுக்கு தலையில் மண்டை தெரியும் அளவிற்கு முடிகள் கொட்டுவதோடு, முடியும் மிக மெலிதாக இருக்கும். இந்த முடி உதிர்வு பிரச்சினையை சரி செய்யக்கூடிய சுலபமான தீர்வை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு அடிப்படை காரணமே நல்ல ஆரோக்கியமான உணவு, நீர், தூக்கம் இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி போவதாலும், தலை முடியை தூய்மையாக பராமரிக்காமல் கெமிக்கல் கலந்த ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவது போன்றவை தான் முக்கியமான காரணங்களாக இருக்கும். இந்த காரணங்களால் முடி கொட்டுவதுடன், முடி பொடுகு போன்றவைகளும் சிலருக்கு அதிகம் இருக்கும் இதனால் முடி மட்டுமின்றி அவர்கள் முகப்பொலிவும் கூட போய் விடும்.இப்போது இந்தக் குறிப்பில் இரண்டையும் சரி செய்யக் கூடிய ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடியது சாதம் கழுவிய தண்ணீரும், வெந்தியமும், இதை வைத்து தான் இந்த பேக்கை இப்போது தயார் செய்ய போகிறோம்.

சாதம் கழுவிய தண்ணீர் ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் பவுடராக ஆக வராது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். சாதம் வடித்த தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக சூடானவுடன் அரைத்து வைத்த வெந்தய பொடியை சேர்த்து மிதமான சூட்டில் கலந்து கொண்டே இருந்தால், இந்த தண்ணீர் நல்ல ஒரு கெட்டிப் பதத்திற்கு வரும், அப்போது அடுப்பை அனைத்து விட்டு உடனே வடிகட்டி கொள்ளுங்கள் ஆறி விட்டால் மிகவும் கெட்டியாகி விடும் வடிகட்ட முடியாது.

- Advertisement -

வடிகட்டி எடுத்து இந்த தண்ணீரில் ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல்லை கலந்து, 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெய் அதிக குளுமை ஒத்துக் கொள்ளாது என்பவர்கள், தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஆறிய பிறகு இதை தலையில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு சீயக்காய் தேய்த்து குளித்து விடுங்கள். இது தொடர்ந்து செய்து வரும் போது முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

இப்போது நாம் வடிகட்டி எடுத்த அந்த வெந்தயம் சக்கை இருக்கிறது அல்லவா, அதை கீழே தூக்கி போடாமல் அதையும் உங்கள் முகத்தில் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். இதில் வெந்திய பொடி, சாதம் வடித்து இது இரண்டுமே முகத்திற்கு நல்ல நிறத்தையும் அழுக்கை வெளியேற்றி முகம் பளபளப்பாக இருப்பதோடு முகப்பரு, முகப்பருவடு போன்றவை கூட இந்த முறையில் சரியாகி விடும்.

இந்த ஒரு குறிப்பு இரண்டு பிரச்சனைகளையும் சரி செய்து கொடுக்கும். இதைத் தொடர்ந்து செய்து வரும் போது முடி உதிர்வு பிரச்சினை சரியாகி உங்கள் முடி நல்ல காடு போல அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

- Advertisement -