இந்த மெத்தடை யூஸ் பண்ணி தேங்காய் எண்ணெயை தலையில் ஒரு முறை இப்படி வைத்துப் பாருங்களேன். பிறகு உங்கள் தலையிலிருந்து ஒரு முடி கூட கீழே உதிராது.

hair22
- Advertisement -

என்ன செய்தாலும் தலையில் இருந்து முடி கொட்டிக் கொண்டே இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனை, ஒரு முடிவில்லாமல் போகுது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். இந்த குறிப்புக்கு நமக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்த்து விடுவோம். வேம்பாலம் பட்டை, சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம் இந்த 4  பொருட்கள்தான். இதை வைத்து தலைமுடியில் எண்ணெயை எப்படி அப்ளை செய்தால் முடி கொட்டாமல் இருக்கும். விரிவான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

வேம்பாலம் எண்ணெய் தயார் செய்யும் முறை:
வேம்பாலம் பட்டை என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் நான்கிலிருந்து ஐந்து துண்டு வேம்பாலம் பட்டை போட்டுக் கொள்ளுங்கள். 100ml தேங்காய் எண்ணெய்க்கு, 5 வேம்பாளம் பட்டை துண்டுகள் இருந்தால் போதும். இரவு எண்ணெயில் இந்த வேம்பாலம் பட்டையை போட்டுவிட்டு, மறுநாள் காலை பார்த்தால் அந்த எண்ணெய் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை தான் இன்று நாம் பயன்படுத்த போகின்றோம்.

- Advertisement -

முருங்கைக்கீரை சாறு எடுக்கும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை போட்டுக் கொள்ளவும். சின்ன சின்ன காம்புகளோடு போட்டாலும் தவறு கிடையாது. இதோடு ஐந்து தோல் உரித்த சின்ன வெங்காயத்தை போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக போல அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை நிறத்தில் கொஞ்சம் முருங்கைக்கீரை சாறு திக்காக உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா. அதோடு தேவையான அளவு இந்த வேம்பாலம் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். முருங்கைக் கீரை சாறும், வேம்பாளம் எண்ணெயும் சரிக்கு சரி கலக்கலாம். (உங்கள் முடிக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு இதை தயார் செய்யுங்கள்.) இப்போது இதை தான் தலையில் வைத்து மசாஜ் செய்ய போகின்றோம்.

- Advertisement -

உங்களுடைய தலை முடியை பாகம் பாகங்களாகப் பிரித்து மயிர் கால்களில் படும்படி இந்த எண்ணெயை உங்கள் கையாலேயே வைத்து நன்றாக அழுத்தம் கொடுங்கள். தலையில் கண்ணுக்குத் தெரியாத சின்ன சின்ன ஓட்டைகளுக்கு உள்ளே இந்த எண்ணெய் இறங்க வேண்டும். ஸ்கேல்ப் முழுவதும் இதை தடவி விடுங்கள். நுனி மூடி வரை வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஐந்து நிமிடம் மசாஜ் செய்து விட்டு, ஒரு மர சீப்பை வைத்து தலையை லேசாக வாரி விடுங்கள். பிறகு மீண்டும் இந்த எண்ணெயை தலையில் விரல்களை வைத்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து தடவ வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க முடி ரொம்ப ரொம்ப ட்ரையா, பார்க்கும்போதே முள்ளு முள்ளா தூக்கிக்கிட்டு, ரொம்ப மோசமா இருக்குதா? டிரையான முடியை, அழகாக செட் செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

வாரம் ஒரு நாள் இந்த ஆயில் பாத் எடுத்தால் நிச்சயமாக உங்களுடைய முடி ஸ்ட்ராங்காக வளரும். ஒரு முடி கூட உதிரவே உதிராது. வேம்பளம் எண்ணெயை தேவையான அளவு தயார் செய்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது முருங்கைக் கீரையையும் சின்ன வெங்காயத்தையும் அரைத்து சாறு எடுத்து அந்த வேம்பாலம் எண்ணெயை, கலந்து தடவினால் சுலபமாக வேலை முடிந்துவிடும். அவ்வளவு தாங்க. பிறகு முடி உதிர்வும் குறையும். அடர்த்தியாக முடி வளரவும் தொடங்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -