சரம்சரமாக மண்டை தெரியும் அளவிற்கு உதிரும் முடியை சட்டுனு நிறுத்த இந்த 3 பொருட்களை இப்படி செய்யுங்க!

jeeragam-venthayam-hair
- Advertisement -

நம்முடைய தலைமுடி நீளமாக இருக்கிறதோ, இல்லையோ ஆனால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருக்கும் முக்கியமாக இருக்கிறது. இப்படி அடர்த்தி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சரம்சரமாக வேரிலிருந்து கொட்டிக் கொண்டிருக்கும் முடி உதிர்வதை தடுத்து நிறுத்த இந்த 3 பொருட்கள் போதும். அது என்னென்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்கிற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

அழகு சார்ந்த பதிவுகளில் முடி உதிர்வும் ஒரு முக்கிய பதிவாக இருந்து வருகிறது. முடி உதிர்தல் என்பது இன்றைய இளம் தலைமுறையினரில் இருந்து ஆரம்பித்து, வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்குமே இருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. முடி உதிர்வுக்கு எவ்வளவு காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் ஊட்டச்சத்து குறைவு!

- Advertisement -

நாம் அன்றாடம் சாப்பிடும் சமையலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து முழுமையாக நிவாரணம் காண முடியும் என்கிற நிலைக்கு வந்தாயிற்று! அழகு ஆரோக்கியத்தை பொறுத்தே அமைந்திருக்கிறது.

தலைமுடி வேரிலிருந்து உதிர்வதற்கு ஊட்டச்சத்து குறைவின்மை முதல் காரணமாக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தேவையற்ற சிந்தனைகளை மனதில் போட்டு அலைபாய விடுபவர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். மேலும் மண்டை ஓட்டு பகுதியில் போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதும், முடி உதிர்வுக்கு காரணமாகிறது. தலைமுடியை வறண்டதாக வைத்துக் கொண்டாலும் இப்படித்தான்.

- Advertisement -

இப்படி நீங்கள் எந்த காரணத்தினால் முடி உதிர்வை சந்தித்தாலும் அதிலிருந்து உடனடியான தீர்வு காண்பதற்கு இந்த 3 பொருட்களை இப்படி பயன்படுத்த வேண்டும். முதலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நாலு ஸ்பூன் அளவுக்கு பச்சைப் பயறு சேர்த்து ஊற வையுங்கள்.

இதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம், ரெண்டு டீஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து ஊற வையுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊறிய பிறகு மறுநாள் காலையில் எடுத்து பார்த்தால் கெட்டியாக பொங்கி வந்திருக்கும். இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல திக்காக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த விழுதினை தலை முழுவதும் அப்படியே வேர்க்கால்களில் இருந்து மசாஜ் செய்தபடி நுனி முடி வரை எல்லா இடங்களிலும் தடவிக் கொள்ளலாம். நேரடியாக தடவ விருப்பம் இல்லாதவர்கள் இதனை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு பிழிந்து எடுத்தால் கிரீம் போல நமக்கு கிடைக்கும். சக்கைகள் அந்த துணியிலேயே தங்கிவிடும். பிறகு தலை முழுவதும் இதே போல எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவி தலைமுடியை கட்டி ஊற வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
குப்பைமேனி இலை இருந்தால் போதும். பெண்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற குட்டி குட்டி முடி பிரச்சனைக்கு, நிரந்தரமாக குட்பை சொல்லிவிடலாம்.

அரை மணி நேரம் நன்கு ஊறிய பிறகு உலர்ந்து காய ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் சாதாரணமான சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு போன்றவற்றை உபயோகித்து தலையை அலசிக் கொள்ளுங்கள். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் உங்களுடைய முடி கண்டிஷனிங் செய்தது போல சூப்பராக இருக்கும். வெந்தயம் குளிர்ச்சி பொருந்தியது என்றாலும், பச்சைப்பயிறு வறட்சியை கொடுக்கும் என்பதால் சமன் செய்து விடும். கருஞ்சீரகம் தலைக்கு ஊட்ட சத்து கொடுத்து வேகமாக வளர செய்யும்.

- Advertisement -