குப்பைமேனி இலை இருந்தால் போதும். பெண்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற குட்டி குட்டி முடி பிரச்சனைக்கு, நிரந்தரமாக குட்பை சொல்லிவிடலாம்.

lips1
- Advertisement -

இது கொஞ்சம் பழைய குறிப்பு தான். ஆனால் பெண்களுக்கு தேவையான மிக மிக முக்கியமான அழகு குறிப்பு. பெரும்பாலும் பெண்கள் என்றாலே அவர்கள் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுப்பார்கள். அதிலும் முகத்தில், கை கால்களில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதில் இருக்கக்கூடிய சிரமம் என்பது ரொம்ப ரொம்ப பெரியது. இந்த தேவையற்ற முடி களை சுலபமாக நீக்குவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. அவை அனைத்தும் செயற்கையானவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

ஆனால் பின் சொல்லக்கூடிய இந்த அழகு குறிப்பை பின்பற்றினால் தேவையற்ற முடிகள் நிரந்தரமாக உதிரும். ஆனால் அதற்கு கொஞ்சம் நேரமும் காலமும் எடுக்கும். உடனே நடக்காது. தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க இயற்கை சொல்லும் அழகு குறிப்பு இரண்டு இதோ உங்களுக்காக.

- Advertisement -

குறிப்பு 1:
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் மூன்று. குப்பைமேனி இலை, வேப்ப இலை, மஞ்சள் தூள் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் நன்றாக பூசி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து ஸ்கிரப் செய்து முகத்தை கழுவி விட்டால் தேவையற்ற சின்ன சின்ன பூனை முடிகள் 30 நாட்களில் முழுமையாக கொட்டிவிடும். தொடர்ந்து இதை நீங்கள் பயன்படுத்தி வர மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் புதிய முடிகள் வளராமல் இருக்கும்.

இந்த மூன்று பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் பொடியாக விற்கின்றது. மூன்று பொடிகளையும் வாங்கி மூன்று பொடியில் இருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி குழைத்தும் பேஸ் பேக்காக நீங்கள் போட்டுக் கொள்ளலாம். இதை முகத்தில் கையில் காலில் எந்த இடத்தில் தேவையற்ற முடிகள் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் பேக் மாதிரி போட்டு வாருங்கள். நிச்சயமாக முடி உதிர்வு குறைவதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்.

- Advertisement -

குறிப்பு 2:
பொன்னாதாரம், ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய கல். நாட்டு மருந்து கடைகளில் விற்கும். இதை வாங்கி இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் தங்கம் பஸ்பம் போல கிடைக்கும் அந்தத் தூளை சிறிதளவு எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்து இதை தேவை இல்லாத முடிகள் இருக்கும் இடத்தில் மேல் தடவி லேசாக ஸ்கிரப் செய்து மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் தேவையற்ற இடங்களில் இருக்கும் முடி நிரந்தரமாக உதிரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இது மட்டும் உங்க கையில இருந்தா போதும் மேக்கப் போடாமலேயே மேக்கப் போட்ட மாதிரி ஜொலிப்பீங்க. இத தெரிஞ்சிகிட்டா திடீர்னு ஒரு பங்க்ஷன் போகனும்னா கூட சட்டுனு சூப்பரா ரெடி ஆயிடலாம்.

இரவு நேரத்தில் கூட இதை முகத்தில் பூசிக்கொண்டு காய்ந்த பிறகு அப்படியே தூங்க செல்லலாம். மறுநாள் காலை எழுந்து முகம் கழுவிக்கொள்ளலாம். உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் இதை ஒரு பேச்சிட்டெஸ்ட் எடுத்து விட்டு அதன் பின்பு முகத்தில் போடுவது நல்லது. தேவையற்ற முடிகளை நீக்கக்கூடிய இந்த இரண்டு அழகு குறிப்புகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

- Advertisement -