வளராத முடியை கூட வளர வைக்க இந்த ஒரு ஹேர் பேக் போதும். 3 முறை இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க. முடி உதிர்வு டக்குனு  நிக்கும்.

hair
- Advertisement -

நம்முடைய தலையில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் உடம்பில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் முடி உதிர்வு இருக்கும். உடல் சூடு அதிகமாக இருந்தால் முடி உதிர்வு இருக்கும். தலையில் பொடுகு, சுண்டு, பேன் தொல்லை அதிகமாக இருந்தால், முடி உதிர்வு இருக்கும். இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கும் ஹேர் பேக்கை தான் இன்றைக்கு நாம பார்க்கப் போகிறோம். இந்த ஹேர் பேக்குடன் சேர்த்து நீங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து தரும் உணவுப் பொருட்களையும் சாப்பாட்டு வர நிச்சயமாக உங்களுக்கு முடி வளர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும்.

முதலில் 7 லிருந்து 8 சின்ன வெங்காயத்தை தோலுரித்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு வெள்ளை துணியில் போட்டு வடிகட்டினால் நமக்கு தேவையான சின்ன வெங்காய சாறு கிடைக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய பவுலில் சின்ன வெங்காயம் சாறு – 4 லிருந்து 5 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதோடு தயிர் – 2 ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 2 ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் – 2, இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலக்குங்கள். ஜெல்லி போல ஒரு பேக் தயாராக கிடைத்திருக்கும். (கேப்ஸ்யூலை மேல் பகுதியில் லேசாக வெட்டி, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் பேக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

உங்களுடைய தலைமுடியில் நீங்கள் வழக்கம் போல வைக்கும் தேங்காய் எண்ணெயை வைத்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்பு இந்த ஹேர் பேக்கை ஸ்கேல்ப்பில் மட்டும் நன்றாகத் தடவி விட வேண்டும். உங்களுடைய மயிர்க்கால்களில் இந்த பேக் 15 நிமிடங்கள் வரை அப்படியே ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து, தலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். (முடியின் கீழ் பக்கம் வரை இந்த ஹேர் பேக் போடவில்லை என்றாலும் பரவாயில்லை. கட்டாயம் மயிர்க்கால்களில் இந்த ஹேர் பேக் நன்றாகப் படும்படி போட்டு விட வேண்டும்.)

வாரத்தில் 2 நாட்கள் இப்படி இந்த பேக்கை போடுங்க. 3 வாரத்தில் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனையில் நல்ல வித்தியாசம் இருக்கும். தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளருவதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, பொடுகு பிரச்சனை குறைந்து, முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளர தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -