ஒரே வாரத்துல தரையை தொடுற அளவுக்கு முடி வளரணுமா?அப்படியன்னா இந்த எண்ணெய்யை தேய்ச்சு பாருங்க, அப்புறம் நீங்களே வேண்டாம்ன்னு சொன்னாலும் உங்க பேச்சை கேக்காம முடி வளந்துட்டே இருக்கும்.

- Advertisement -

நல்ல நீளமான கருவென்று அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் பெண்களை பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மாதிரி கூந்தல் நமக்கும் இருக்க வேண்டும் என்று ஒருக்கனமாவது மனதில் ஆசை தோன்றி மறைவது இயல்பு தான். அடுத்த நிமிடமே இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று வேலையை பார்க்கத் தொடங்கி விடுவோம். இனி அந்த கவலையே வேண்டாம் உங்களுக்கு எவ்வளவு நீளமான முடி வளர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு நீளமாக வளர்த்துக் கொள்ளலாம் . அதற்கான வழிமுறையை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முடி நல்ல நீளமாகவும், ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நம் உடல் நலனிலும் அக்கறை எடுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு, நிம்மதியான தூக்கம், அமைதியான மனநிலை இதையெல்லாம் நாம் கொஞ்சமாவது கடைபிடித்தால் தான், நாம் முடியை வளர்க்க முடியும். முடிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? நிச்சயமாக உண்டு, முடி வளர நாம் சாப்பிடும் உணவு , உறக்கம், சுற்றுச்சூழல் அனைத்துமே உதவி செய்யும். இதை சரியாக செய்யாமல் முடி வளர்க்க நினைத்தால் அது முழுமையான பலனை தராது. சரி இப்போது இந்த முடி வளர்ச்சிக்கான எண்ணையை நாம் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு தேவை இரண்டே பொருள் தான். 50 கிராம் வெந்தயம் ஐந்து கிராம்பு, 50 கிராம் எண்ணெய். வெந்தயத்தை எடுத்து அத்துடன் கிராம்பையும் சேர்த்து மிக்ஸி யில் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இது லேசான கொரகொரப்புடன் தான் அரைப்படும் எனவே அரைத்து முடித்தவுடன் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். சலித்து எடுத்த இந்த பவுடருடன் 50 கிராம் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையை கலந்து வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது நீங்கள் கலந்து வைத்த இந்த தேங்காய் எண்ணெயை பாத்திரத்தை அதில் வைத்து டபுள் பாயில் முறையில் சூடு படுத்தி கொள்ளுங்கள் அவ்வளவு தான் முடி வளர்ச்சிக்கான எண்ணெய் தயாராகி விட்டது.

- Advertisement -

உங்களுக்கு இப்படி சூடு படுத்த முடிய வில்லை என்றால், இந்த தேங்காய் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி நன்றாக மூடி 10 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுங்கள். அப்போது வெந்தயத்தின் சாறு, கிராம்பின் சாறு அனைத்தும் எண்ணெயில் கலந்து விடும். இந்த முறையில் எண்ணெய் தயார் செய்ய பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த எண்ணையை தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நன்றாக வேர்க்கால்களில் படும்படி தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். மசாஜ் செய்த பிறகு எண்ணெய் தலையில் நன்றாக ஊறட்டும், இரண்டு மணி நேரம் வரை கூட தலையில் இருக்கலாம் தவறில்லை. ஆனால் வெந்தியம் கொஞ்சம் குளுமையான பொருள் ஆகையால் உங்கள் உடல்நிலைக்கேற்ப நேரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேரளத்து பெண்களின் மாசு மறுவற்ற சரும அழகுக்கு காரணம் இந்த எண்ணெய் தான். இந்த எண்ணெயை உடம்பில் பூசி குளித்தால் போதும். சருமம் பளிங்கு சிலை போல மின்னும்.

வாரம் இரண்டு முறை இந்த எண்ணெய் தேய்த்து குளித்து விடுங்கள். உங்கள் உடல் உள்ள சூடு, தலையில் உள்ள உஷ்ணம், அழுக்கு எல்லாம் நீங்கி, இந்த கிராம்பின் வாடைக்கு பொடுகு, பேன் தொல்லை கூட நீங்கி விடும். ஒரு வாரம் இதை செய்த பிறகே உங்கள் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும். நீண்ட அழகிய கருங்கூந்தல் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த முடி வளர்ச்சிக்கான அழகு குறிப்பை பயன்படுத்தி அழகிய கூந்தலை வளர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -