ஸ்கேல்பிலிருந்து உங்க முடி முட்டி மோதி கடகடவென வளர்ந்தே தீரும். இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து ஹேர் பேக் போட்டால்.

hair23
- Advertisement -

ஸ்கேல்பில் எல்லோருக்கும் முடி வளரக்கூடிய தன்மை கட்டாயம் இருக்கும். ஆனால் வேர்கால்களில் இருந்து முடி வளர்வதில் தான் சில பேருக்கு தாமதம் இருக்கும். நம்முடைய வேர் கால்களில் இருந்து முடியை வேகமாக வளர வைக்க ஒரு சூப்பரான ஹேர்பேக் உள்ளது. இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு மூன்று பொருட்கள் தான் தேவை. இந்த மூன்று பொருட்களை வைத்து வாரத்தில் இரண்டு நாள் ஹேர் பேக் போட்டு வர, வளராத உங்கள் தலைமுடியும் வளரும். ஏற்கனவே உங்களுடைய தலையில் அடர்த்தியாக தான் முடி இருந்தது. சமீபகாலமாக முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியாதது வளரவில்லை எனும் பட்சத்தில் இந்த பேக்கை நீங்கள் பயன்படுத்தலாம், அல்லது இயற்கையாகவே உங்களுடைய தலையில் முடியானது மெல்லிசாக தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்பவர்களும் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

முடியின் வளர்ச்சியை மூன்று மடங்கு அதிகரிக்க:
இந்த அழகு குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் 3 அல்லவா. அது என்னென்ன என்பதை பார்க்கலாம். முருங்கைக்கீரை, அரிசி வடித்த கஞ்சி, ஆளி விதை. இதை ஆங்கிலத்தில் ஃபிளாக் சீட்ஸ் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் இந்த ஆளி விதையை பற்றி தெரிந்திருக்கும். முடி வளர்ச்சிக்கு இது ரொம்ப ரொம்ப பயன்படக்கூடிய ஒரு விதைதான். இதை வைத்து எப்படி ஹேர்பேக் தயார் செய்யலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் நமக்கு அரிசி வடித்த கஞ்சி தேவை. இன்று காலையோ, மதியமோ அரிசி வடித்த பின்பு கஞ்சி இருக்கும் அல்லவா. அதில் இரண்டு ஸ்பூன் ஆளி விதைகளை போட்டு ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை ஊறிக் கொண்டிருக்கும் ஆளி விதையை, அரிசி கஞ்சியோடு அப்படியே மிக்ஸி ஜாரில் போடுங்கள். அரிசி வடித்த கஞ்சி லேசாக புளித்து இருக்கும். ஆளி விதை அந்த கஞ்சியில் நன்றாக ஊறி இருக்கும். இதோடு சுத்தம் செய்த 2 கைப்பிடி அளவு முருங்கைக்கீரைகளையும் போட்டு விழுதாக அரைக்கவும்.

தண்ணீர் ஊற்ற தேவையில்லை. இந்த விழுது ரொம்பவும் சாஃப்டா தான் நமக்கு கிடைக்கும். அதை அப்படியே தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். ஒரு வேலை உங்களுக்கு திப்பி திப்பியாக தலையில் தட்டுப்படும் எனும் பட்சத்தில், இதை ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி, உங்கள் கையை கொண்டு கொஞ்சம் சிரமப்பட்டு பிழிந்து எடுத்தால் சூப்பரான ஜெல்லி போல ஒரு ஹேர் பேக் கிடைத்திருக்கும்.

- Advertisement -

அதை வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து மீதம் இருக்கும் ஹார்பேக்கை நுனி முடி வரை அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இந்த பேக் தலையில் இருக்கலாம். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். உங்களுக்கு ரொம்பவும் சளி பிடிக்கும் சைனஸ் பிரச்சனை உள்ளது என்றால் 10 நிமிடத்தில் இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு பிறகு தலைக்கு குளிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: பின்னல் கூட போட முடியாத மெல்லிய முடியை பெரிய கொண்டை போடும் அளவிற்கு தடிமனாக வளர்க்க தலைக்கு குளிக்கும் முன் இதை தேய்க்க மறக்காதீர்கள்.

இந்த ஹேர் பேக்கை வாரம் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடி சூப்பராக வளர தொடங்கிவிடும். அழகு குறிப்பு பிடித்தவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -