இந்த ஒரே 1 இலை போதும். முழங்காலுக்கு கீழே உங்கள் முடி வளர்ந்து நிற்பதை யாராலும் தடுக்க முடியாது.

hair
- Advertisement -

காலம் எவ்வளவு மாறினாலும் பெண்களுக்கு முடி வளர்ப்பதில் உள்ள ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. எல்லா பெண்களுக்குமே முழங்காலுக்கு கீழே முடி வளர வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த அவசர காலகட்டத்தில் முடியை பராமரிப்பத்திற்கான நேரம் தான் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, அரக்கு தேய்த்து குளிப்பது என பாரம்பரியமான பழக்கங்கள் பலவற்றை கடைபிடித்து வந்தோம். இப்போது அதை எல்லாம் செய்வதற்க்கு நேரம் இல்லை. மிக எளிமையாக, அதிக செலவு இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் தலை முடியை பாதுகாக்க என்ன வழி என்று பார்ப்போம்.

முடி உதிர்வதை தடுக்கவும், முடி நன்றாக வளரவும் கொய்யா இலையை தான் நாம் பயன்படுத்த போகிறோம். இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதில் பாக்ட்டீரியா எதிர்ப்பு, விட்டமின் சி, போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து அதில் இந்த கொய்யா இலைகளை நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இலைகளை பறிக்கும் போது அதில் பூச்சி வெட்டு, சில இலைகள் சுருங்கி போய் இருக்கும் அது போன்ற இல்லாமல் பார்த்து நல்ல இலைகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இலைகளை தண்ணீரில் நன்றாக அலசி ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன சின்னதாக நறுக்கி போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது. அரைத்து முடித்ததும் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வடிகட்டி எடுத்த கொய்யா இலையின் சாறை முடியின் வேர்கால்களில் படும்படி தடவ வேண்டும். நீங்கள் தலைக்கு குளித்த பிறகு இதை தடவிக் கொள்ளுங்கள். ஏனெனில் தலையில் எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள் போன்றவை இருக்கும் போது இதை தடவினால் பலன் இல்லை. தலைக்கு குளித்து முடி நன்றாக காய்ந்து இருக்கும் போது இந்த கொய்யா இலை சாற்றை ஒரு பஞ்சல் முக்கி எடுத்து தலைமுடி வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து ஒரு பத்து நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த சாறு தலையில் ஊற வேண்டும். பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு உங்கள் முடியை அலசி விட்டால் போதும்.

வாரம் ஒரு முறையாவது இதை செய்து வர வேண்டும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயமாக செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து செய்து வாருங்கள். முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -