சாட்டை சட்டையாக முடி வளர தேங்காய் எண்ணெயோடு இந்த 2 பொருட்களை சேர்த்து தலையில் தடவி கொண்டாலே போதும்.

hair14
- Advertisement -

சாட்டை சாட்டையாக தாறுமாறாக முடி வளர வேண்டும் என்றால் இந்த எளிமையான குறிப்பு உங்களுக்காக மட்டும். நிறைய பேருக்கு தலை முடி வளராமல் இருக்கும். ஆனால், தலை முடியை வளரச் செய்ய எந்த ஒரு குறிப்பையும் பின்பற்ற முடியாது. அதற்கான நேரமும் அவர்களுக்கு இருக்காது. மிக மிக சுலபமாக தேங்காய் எண்ணெயுடன் இந்த இரண்டு பொருளை சேர்த்து, இப்படி சூடு செய்து வைத்துக்கொண்டால் போதும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த எண்ணெயை தலைக்குத் தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளித்தால் முடி வளர்ச்சி அபரிமிதமாக அதிகரித்துவிடும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50 கிராம் வெந்தயம், 15 லவங்கம், போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு முறை சலித்துக் கொள்ளுங்கள். குருணை இல்லாத நைசாக பொடி தான் நமக்கு பயன்படும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் இருந்து இந்த பொடியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பொடியோடு தேங்காய் எண்ணெய் 100ml ஊற்றிக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயோடு இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெயை சூடு செய்ய வேண்டும். இந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து சூடு செய்யக்கூடாது. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அந்த கொதிக்கின்ற தண்ணீரின் மேல் இந்த எண்ணெயை வைத்து சூடு செய்ய வேண்டும்.

வெந்தயத்தில் கிராம்பில் உள்ள  இருக்கக்கூடிய சத்து நன்றாக அந்த எண்ணெயில் இறங்க வேண்டும். அதன் பின்பு சுடு தண்ணீரில் இருந்து இந்த பாத்திரத்தை இறக்கி வைத்து நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெயை வடிகட்ட வேண்டாம். அப்படியே இந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து 2 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து விட்டு, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாளோ அல்லது மூன்றோ நாலோ இந்த எண்ணெயை பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள், தயார் செய்த எண்ணெயை 10 நாட்கள் நன்றாக வெயிலில் வைத்து காயவைத்து அதன் பின்பு அந்த எண்ணெயை தலையில் தேய்த்தாலும் நல்ல பலன்தரும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -