தலை வலி குணமாக முத்திரை

thalaivali-muthirai

இன்றைய அவசரமான வாழ்க்கைமுறைகளால் மக்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒருவகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுக்கூடிய பாதிப்புகளில் தலைவலியும் ஒன்று. மனஅழுத்தம், நரம்புக்கோளாறுகள், உடலில் நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் தீமையான கழிவுகள் போன்றவை தலைவலி ஏற்பட சில முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சிலருக்கு இது ஒற்றைத் தலைவலியாக மாறி அதனால் அவர்கள் நீண்ட காலம் அவதியுற நேர்கிறது. அப்படி நெடுங்காலம் தலைவலியால் அவதியுறுபவர்களுக்கான நிவாரணம் தான் இந்த”மஹாசிரஸ்”முத்திரை.

thalaivali

தலை வலி நீங்க முத்திரை செய்யும் முறை:

முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். (எல்லா முத்திரைப் பயிற்சிகளுக்கும் இந்த இரு பொதுவான விதிகளைப் பின்பற்ற வேண்டும்).

பின்பு உங்கள் இருக்கைகளிலுள்ள ஆட்காட்டி மற்றும் நடுவிரல்கள், உங்கள் பெருவிரல்களை மிருதுவான அழுத்தத்துடன் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் மோதிர விரல்களை கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளதைப்போல உள்ளங்கைக்குள் மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சுண்டு விரல்கள் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

Thalaivali mudra in Tamil

- Advertisement -

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த “மஹாசிரஸ்” முத்திரையை ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் நீண்ட நாள் இருக்கும் தலைவலி நீங்கும். ஹைப்பர்டென்ஷன் என்ற அதீத மன இறுக்கம் நீங்கும். மூளை செல்கள் புத்துணர்வு பெற்று சிந்தனைத் திறன் மேம்படும். கண்பார்வை தெளிவு பெறும்.

இதையும் படிக்கலாமே:
உடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், தியான முத்திரைகள், சித்த வைத்திய குறிப்புகள் போன்றவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.