முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை எளிதாக விரட்டி அடிக்க 1 ஸ்பூன் உளுந்து இருந்தால் போதுமே! முகக் கருமை நீங்க எளிய டிப்ஸ் என்ன?

face-black-urad-dal
- Advertisement -

யாரேனும் நம்மை பார்த்து பேசும் பொழுது முகத்தை தான் முதலில் பார்க்கின்றனர். இந்த முகமானது பொலிவுடன் இருக்க முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை முதலில் விரட்டி அடிக்க வேண்டும். கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், உதட்டை சுற்றி இருக்கும் கருமை, கழுத்தை சுற்றி இருக்கக்கூடிய கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதாக விரட்டி அடிப்பது எப்படி? என்பதைத் தான் அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய சருமமானது மிகவும் சென்சிடிவ் ஆன தன்மை கொண்டது. கண்களுக்கு தெரியாமல் சிறு சிறு துவாரங்கள் முகம் முழுவதும் இருக்கும். இந்த துவாரங்கள் வழியே தூசுகள், மாசுகள் போன்றவை சென்று பருக்களையும், கருந்திட்டுக்களையும் உருவாக்குகிறது. இதற்கு முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. தினமும் மூன்று முறையாவது முகத்தை வெறும் தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.

- Advertisement -

ஒரு டீஸ்பூன் அளவிற்கு முழு வெள்ளை உளுந்தை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு பால் சேர்த்து ஊற வையுங்கள். காய்ச்சிய அல்லது காய்ச்சாத பால் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதினை முகம், கழுத்து மற்றும் கருமை இருக்கும் கை, கால் போன்ற பகுதிகளிலும் நீங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பத்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பாலை தொட்டுக் கொள்ளுங்கள். மசாஜ் செய்த பிறகு அதை அப்படியே உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து முகம் இருக ஆரம்பிக்க வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் முகத்திற்கு மென்மையாக மீண்டும் மசாஜ் செய்து முகத்தில் பூசிய இந்த கலவையை ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பாக கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைய இது போல மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதே போல உதட்டை சுற்றி இருக்கும் கருமை, கரும்புள்ளிகள் நீங்கவும் இது போல மென்மையாக விரலால் மசாஜ் செய்யலாம். கழுத்தை சுற்றி இருக்கும் கருமையை இது போல மசாஜ் செய்து வருவதன் மூலம் எளிதாக விரட்டி அடிக்க முடியும். பாலுடன் சேர்ந்த உளுந்தில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இவை முகத்தில் இருக்கக் கூடிய கருமைக்கு எதிராக செயல்பட்டு முகத்தை மென்மையாகவும், இறுக்கத்துடனும், வெண்மையாகவும் மாற்றுவதற்கு உதவும்.

இந்த கலவையை ஸ்டோர் செய்து வைக்கக்கூடாது. அவ்வப்பொழுது தேவைப்படும் சமயத்தில் பிரெஷ் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்தையும் நீங்கள் இது போல பயன்படுத்தலாம். உளுந்தம் மாவையும் நீங்கள் பாலில் ஊற வைத்து இது போல செய்யலாம். அதற்கு முதலில் உளுந்தை லேசாக ஒரு வாணலியில் வறுத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது சுலபமாக பேக் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

- Advertisement -