முகப்பரு நீக்கும் முல்தானி மெட்டி

pimples face pack
- Advertisement -

13 வயதிலிருந்து 25 வயது வரை இருக்கக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சினையாக தான் இந்த முகப்பரு பிரச்சனை திகழ்கிறது. முகப்பரு வந்துவிட்டாலே முகத்தின் அழகு பாழாகிவிடும். அது மட்டுமல்லாமல் முகப்பரு வந்து சென்ற இடத்தில் ஒருவித கரும்புள்ளி போல் தோற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு முகப்பரு இருந்த இடத்தில் பள்ளங்கள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிறிய அளவில் இருக்கக்கூடிய முகப்பருவாக இருந்தால் அதனால் அந்த அளவிற்கு பிரச்சனை ஏற்படாது.

ஒரு சிலருக்கு பெரிய அளவில் ஏற்பட்டு அதனால் வலியும், வேதனையும் அனுபவிக்க கூடிய சூழ்நிலை கூட உண்டாகும். இன்னும் சிலரோ தங்கள் கைகளை வைத்து அந்த பருக்களை கிள்ளி அதனால் அதிலிருந்து ரத்தம் வரும் அளவிற்கு கூட ஆளாக்கி விடுவார்கள். இப்படி முகப்பருக்களால் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நீக்குவதற்கு முல்தானி மெட்டி உடன் எந்த பொருளை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக முகப்பருக்கள் ஏற்படுவதற்கு காரணமாக சொல்லப்படுவது முக துவாரத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள்தான். முக துவாரத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் சேராமல் அவ்வப்பொழுது அதை சுத்தம் செய்து கொண்டு இருந்தாலே முகப்பரு பிரச்சனை என்பது ஏற்படாது இது இன்னும் சில நேரங்களில் ஹார்மோன் மாற்றத்தினாலும் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது முகப்பரு வந்த பிறகு அதை நாம் நம்முடைய நகங்களாலோ வேறு எந்த பொருட்களாலோ உடைப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

இதை சரி செய்வதற்கு நமக்கு மிகவும் உதவி புரியக்கூடிய ஒரு பொருளாக திகழ்வதுதான் முல்தானி மெட்டி. இது முகப்பருவை மட்டும் நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகப்பரு ஏற்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய தழும்புகளையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான சந்தன பொடியையும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் தூளையும் சேர்த்து சுத்தமான பன்னீர் ஊற்றி பேக் தயார் செய்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு இந்த பேக்கை தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் செய்தால் போதும் முகப்பருக்கள் வருவது முற்றிலும் தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் முகப்பருவால் ஏற்பட்ட கரும்புள்ளிகளும் வடுக்களும் நீங்கி முகம் பொலிவான தோற்றத்தை பெறும்.

இதையும் படிக்கலாமே: இளநரை கருமையாக ஹேர் பேக்

மிகவும் ஆரோக்கியமான முறையில் சுத்தமான பொருட்களை வாங்கி நம் முகத்திற்கு நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகம் என்றுமே எந்தவித மாசு மருவும் இன்றி அழகாக தோற்றமளிக்கும்.

- Advertisement -