என்ன ஆனாலும் முகத்தில் முகப்பருக்கள் வரக்கூடாதா? முகத்தில் ஒரு பரு கூட இல்லாமல் எளிதாக விரட்டி அடிப்பது எப்படி?

neem-powder-face-pack
- Advertisement -

இளம் வயதினரை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த முகப்பருக்கள், காலப்போக்கில் மறைந்து விட்டாலும் கூட, அதன் வடுக்களில் இருந்து அவ்வளவு சுலபமாக மீள முடிவதில்லை. முகப்பருக்களை வரவிடாமல் செய்யவும், வந்த முகப்பருக்களை விரட்டி அடித்து ஓட விடவும் செய்யக்கூடிய இந்த அற்புதமான ரெமெடி என்ன? எதை வைத்து செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு ரகசியங்களின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இளமைப் பருவத்தில் இருப்பவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். வெளியில் இருக்கக்கூடிய காற்று மாசு காரணமாகவும் பெரும்பாலும் முகப்பருக்கள் தோன்றுகிறது. முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை கொண்டவர்களுக்கு முகப்பருக்கள் அதிகமாக வரக்கூடும்.

- Advertisement -

ஆனால் இளமை பருவத்தை கடந்தும் கூட, முகப்பருக்கள் வருகிறது என்றால் உடலில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லை என்று தான் அர்த்தம். முகப்பருக்களை விரட்டி அடிப்பதற்கு முதல் வேலையாக நீங்கள் செய்யக் கூடியது ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் ஆவது குறைந்தது பருகி வர வேண்டும். அப்போது தான் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறுவதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் முகப்பருக்கள் தோன்றாமல் இருக்கிறது.

உடலில் கழிவு தேக்கம் அதிகரித்தால், அதை எப்படி வெளியே தள்ளுவது என்று தெரியாமல் சருமத்தின் துளைகளின் வழியே இந்த வகையில் பருக்களாக உருவாகிறது. இவற்றை விரட்டி அடிப்பதற்கு முதலில் அதிகளவிற்கு தண்ணீரை தினமும் பருகுங்கள். பிறகு ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, ஒரு டீஸ்பூன் அளவிற்கு நீம் பவுடர் அதாவது வேப்ப இலை பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வேப்ப இலையில் இருந்து கிடைக்கக்கூடிய சாறையும் நீங்கள் பயன்படுத்தலாம். வேப்ப இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப் பெறுகிறது. இதனுடன் தேவையான அளவிற்கு ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல திக்காக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் முகத்தில் புருவங்கள், உதடுகள், கண்கள் போன்றவற்றைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தடவி உலர விட்டு விட வேண்டும். ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் நன்கு உலர்ந்து விடும். உலர்ந்த பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி கொள்ளுங்கள். அவ்வளவுதான், தினமும் இதுபோல செய்து வாருங்கள், ஏழு நாளில் முகப்பருக்கள் மறையும்.

- Advertisement -

பருக்கள் அனைத்தும் மறைந்ததும் தினமும் செய்வதை நிறுத்திவிட்டு வாரம் ஒரு முறை செய்து வாருங்கள். இதுபோல தொடர்ந்து செய்து வரும் பொழுது மீண்டும் முகப்பருக்கள் அந்த இடத்தில் தோன்றவே செய்யாது. முகப்பருக்கள் இருந்த வடுக்களும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். வேப்ப இலை பொடியில் இருக்கக்கூடிய கசப்புத் தன்மையுடன் கடலை மாவு சேர்க்கும் பொழுது முகப்பருகளை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகளுடன் எதிர்த்து போராடுகிறது. இதனால் புதிதாக பருக்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்தில் அசர வைக்கும் அசுர வேகத்தில் முடி வளர இந்த ஒரு சிம்பிள் டெக்னிக்கை மட்டும் ஃபாலோ பண்ணா போதும். இளநரை முடி உதிர்வு என எந்த பிரச்சனையும் உங்க வாழ்நாளில் வராது.

மேலும் வந்த பருக்களையும் விரட்டி அடித்து விடலாம். இந்த பேக்கை கழுத்து பின் பகுதியில் இருந்து, கழுத்து முன் பகுதி வரை தடவி உலர விட்டு கழுவி வந்தால், கழுத்து கருமையும் மாயமாய் மறைந்து ஓடிவிடும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, பெஸ்ட் ரிசல்ட் பெறலாம்.

- Advertisement -