ஒரே வாரத்தில் அசர வைக்கும் அசுர வேகத்தில் முடி வளர இந்த ஒரு சிம்பிள் டெக்னிக்கை மட்டும் ஃபாலோ பண்ணா போதும். இளநரை முடி உதிர்வு என எந்த பிரச்சனையும் உங்க வாழ்நாளில் வராது.

hair oil
- Advertisement -

அழகிற்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் கூட, உங்கள் அழகை மேலும் அழகாக காட்டுவதில் முடிக்கு முக்கிய பங்கு உள்ளது. முடி நீண்டு கருகருவென்று இருந்தால் பார்ப்பதற்கு கொள்ளை கொள்ளும் பேரழகியாக இருப்பீர்கள். அப்படியான முடி வளர்ச்சி உங்களுக்கு வேண்டுமெனில் இந்த ஒரு எளிமையான முறையை பின்பற்றி பாருங்கள். உங்களின் முடி உதிர்வு பிரச்சனை அனைத்தையும் இதில் சரியாகும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணையை தயாரிக்கும் முறை:
இந்த எண்ணையை தயாரிக்க முதலில் இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். இதை வெயிலில் காய வைக்காமல் வீட்டின் நிழலில் இரண்டு நாள் மட்டும் காய வைத்தால் போதும். கறிவேப்பிலையின் நிறம் மாறாமல் அதில் இருக்கும் ஈரத்தன்மை மட்டும் இழுக்கும் வரை காய்ந்தால் போதும். அதே போல் இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தையும் ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் காய வைத்த கறிவேப்பிலை வெந்தயம் இரண்டையும் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை வெயிலில் காய வைத்து இருப்பதால் உடனே அது அரை பட்டு விடும். அரைத்த இந்த பவுடரை ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியில் சேர்த்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டில் 200 கிராம் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் இந்த முடிச்சை போட்ட பிறகு இரண்டு நாள் வரை அப்படியே வைத்து விடுங்கள். இந்த முடிச்சில் உள்ள சாறு முழுவதுமாக அந்த எண்ணெயில் இறங்கி விடும். அதன் பிறகு நீங்கள் தலைக்கு குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை உங்களின் தலையின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து லேசாக மசாஜ் செய்த பின் எப்போதும் போல தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

இதே முறையில் நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் ஊற்றி அதிலும் இந்த முடிச்சை போட்டு வைத்து நீங்கள் எப்போதும் பயன்படுத்தி எண்ணெய்க்கு பதிலாக இதையே பயன்படுத்தி வந்தால் இன்னும் கூட முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அது மட்டுமின்றி இரவில் இப்படி தேய்த்து பிறகு மறுநாள் தலைக்கு குளிக்கும் போதும் முடியின் வளர்ச்சி அதிகமாகும். இரவில் இந்த எண்ணெய் தேய்ப்பதாக இருந்தால் மட்டும் நல்லெண்ணெய் ஊற்றி தேய்க்க வேண்டாம். அதிக குளுமை உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது.

இதை தினமும் தேய்க்கும் போது பிசுபிசுப்பு அதிக வாடை போன்றவை எல்லாம் இருக்காது எனவே தாராளமாக இதை தேய்த்துக் கொள்ளலாம். இதை தேய்க்கும் பொழுதெல்லாம் லேசாக மசாஜ் மட்டும் செய்து கொடுக்க மறக்காதீர்கள். இதை தேய்த்த ஒரு வாரத்திற்குள்ளே உங்கள் முடி வளர்ச்சி நீங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கும். அதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: நோ செலவு, இந்த 5 பொருளை பயன்படுத்தினால் பவுடர் கூட போட வேண்டாம் முகம் கண்ணாடி மாதிரி என்றென்றும் பளபளன்னு இருக்குமே!

முடி வளர தேவையான இந்த எண்ணெய் தயாரிக்கும் முறை. அதன் பயனும் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த அழகு குறிப்பு பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -