அனைவரையும் வசீகரிக்கும் முகம் பெற, தொட்டதெல்லாம் வெற்றியாக புது கண்ணாடியில் இதை செய்யுங்கள்! தோல்விகள் இனி இல்லை.

face-mirror

எல்லோருக்குமே தாங்கள் வசீகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அனைவரையும் கவரும் வசீகர முகம் பெறுவதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு இந்த மந்திரம் உச்சரித்தால் செல்லும் காரியம் நிச்சயம் ஜெயமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும், தொட்டதெல்லாம் பொன்னாகும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

wall mirror

இதற்கு புதிதாக கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடியில் உங்களைத் தவிர வேறு யாருடைய முகமும் பார்க்கக் கூடாது. சிறிய அல்லது பெரிய அளவிலான எந்த கண்ணாடியையும் நீங்கள் இதற்கு பயன்படுத்தலாம். தனியாக ஒரு பாலித்தீன் பையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் கூட வைத்துக் கொள்ளலாம் தவறில்லை.

நீங்கள் எந்த ஒரு விஷயத்துக்காக வெளியில் சென்றாலும் இந்த கண்ணாடியை பார்த்து விட்டு செல்ல வேண்டும். இதனால் வசீகரிக்கும் முகமும், உங்களுடைய பேச்சு மற்றவர்களை கவரும் வண்ணமும் அமையும். கீழ்வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து முடிந்த பின்பு மூன்று முறை கண்ணாடியில் உங்கள் முகத்தின் மீது ஊதுங்கள்.

mirror kannaadi

உங்களுடைய மூச்சுக் காற்று அந்தக் கண்ணாடி மீது பட வேண்டும். இப்படி நீங்கள் எப்போது எல்லாம் செய்து விட்டு வெளியில் சென்றாலும் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். இதுவரை உங்களை அவமானப் படுத்தியவர்கள், அலட்சிய படுத்தியவர்கள் கூட மதிப்புக் கொடுத்து உங்கள் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் ஸ்ரீ முகி ஸ்ரீ முகி ஜெய! ஜெய!!

face0

உங்களுடைய முகம் ராசியான முகமாக மாறி வரும். அடிக்கடி செய்யுங்கள்! வெளியில் சென்றால் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தினமும் ஒரு முறையாவது இப்படிச் செய்யுங்கள். சிலருடைய முகத்தைப் பார்த்தாலே அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவர்கள் எதிரில் வந்தாலே துரதிஷ்டம் வரும் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். முகராசி என்கிற ஒன்று சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். அப்படி அல்லாதவர்களுக்கு இந்த பரிகாரம் சிறந்த பலன்களை கொடுக்கும்.

தினமும் இப்படி செய்யும் பொழுது உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தாந்த்ரீக முறையில் உங்களுடைய ஆரா சக்தியை அதிகரிக்க செய்து நல்ல ஆற்றல்களை வெளியிடும். இதனால் நீங்கள் தொட்டது அனைத்தும் பொன்னாகும். தோல்வியையே சந்தித்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கும் பொழுது தொடர் வெற்றியைக் காண்பீர்கள். அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது! என்று நினைப்பவர்களுக்கு இப்படி செய்யும் பொழுது புது தன்னம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும்.

award-success

துவண்டு போன நீங்கள் உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும், கீழே இருப்பவர்கள் மேலே ஒரு நாள் செல்ல தான் செய்வார்கள். அந்த நாள் இந்த பரிகாரம் செய்தால் விரைவிலேயே வரும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் தான் முழுப் பலன் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்! எனவே இப்படி செய்தால் நடக்குமா? என்றெல்லாம் யோசிக்காமல், நடக்கும்! நடந்தே தீரும்! என்ற நம்பிக்கையுடன் செய்யுங்கள்.