இதை மட்டும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள். தோல் சுருக்கம் நீங்கி உடல் பளபளவென்று மாறும்.

face3
- Advertisement -

இளம் வயதிலேயே சிலருக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலையேயாகும். சிலர் தினமும் வெளியில் செல்வதால் சுற்றுசூழல் மாசுபாடு, அதிகம் வெப்பம், சிலருக்கு அதிக வேலை பளு இவ்வாறான காரணங்களினாலே தோல் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறான தோல் சுருக்கங்கள் மறைந்து என்றென்றும் இளமையோடு திகழ்வதற்கான வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய குறிப்புகளை பற்றி தான் இங்கு பார்க்கப் போகின்றோம்.

face

குறிப்பு 1:
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு – 50 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், மைசூர் பருப்பு – 50 கிராம், பச்சை அரிசி – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் – 2 ஸ்பூன், அதிமதுரப் பொடி – 2 ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் பச்சையரிசி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதனுடன் 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் அதிமதுரப் பொடியை சேர்த்துக் கொள்ளவேண்டும். இவற்றை ஒரு முறை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

face10

பயன்படுத்தும் முறை:
அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி கொள்ள வேண்டும். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் அப்படியே ஊற விடவேண்டும். பின்னர் இவற்றை நன்றாக தேய்த்து கழுவி விட்டால் முகம் பளிச்சென்று மாறி முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்தும் இருக்கும்.

- Advertisement -

இந்த பொடியுடன் தயிர், பன்னீர், பசும்பால் மற்றும் சாதாரண தண்ணீர் இவற்றில் ஏதேனும் ஒன்றினை கலந்து பயன்படுத்தலாம். இதனை குளியல் பவுடராகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர உடலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து நல்ல மாற்றம் உண்டாகும்.

face2

குறிப்பு 2:
தேவையான பொருட்கள்:
முட்டை – 3, தேன் – 1 ஸ்பூன், பால் – 2 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – அரை ஸ்பூன், பாதாம் எண்ணெய் – அரை ஸ்பூன், சூரியகாந்தி எண்ணெய் – அரை ஸ்பூன், சோப்பு துண்டுகள் – ஒரு ஸ்பூன்.

face11

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் தேன், பால், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதனுடன் ஏதேனும் ஒரு குளியல் சோப்பினை சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு இந்த கலவையை உங்கள் உடலில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை என்று இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள சுருக்கங்கள் நீங்கி தோல் பளபளவென்று மாறிவிடும்.

- Advertisement -