இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் தெரிகிறதா? முக சுருக்கங்கள் நீங்கி மீண்டும் பழைய பொலிவைப் பெற இந்த 3 பொருள் போதுமே!

muga-surukkam1
- Advertisement -

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால் நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலையும், நம் உணவு முறை பழக்கமும் நம் தோற்றத்தை எளிதாக முதிர்ந்து போனது போல காண்பித்து விடுகிறது. இதனால் நம்முடைய தன்னம்பிக்கையும் சற்று தளர்ந்து விட தான் செய்கிறது. எந்த அளவிற்கு நாம் இளமையாக தோற்றம் அளிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய தன்னம்பிக்கையும், பலமும் அதிகரிக்கும் என்கிறது ஆய்வு முடிவுகள்! எனவே நம் முகத்தில் இருக்கும் முதிர்ந்த தோற்றம் மாறி மீண்டும் பழைய பொலிவுடன் இளமையான தோற்றம் பெற செய்ய வேண்டிய முக்கிய வீட்டுக் குறிப்பு தான் இது! எளிமையாக செய்ய வேண்டிய இந்த குறிப்பை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

muga-surukkam

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்க அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி வருவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். நீங்கள் சத்துள்ள உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் இழந்த பொலிவை எளிதாக மீட்டு எடுக்க முடியும். எனவே உண்ணும் உணவில் சற்று கவனம் செலுத்துங்கள். சத்துள்ள காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் இயற்கையாகவே இளமையான தோற்றம் பெறலாம்.

- Advertisement -

அதிக எண்ணெய் பொரித்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அல்லது முறையற்ற உணவுப் பழக்க முறை கொண்டு இருந்தால் நிச்சயமாக உங்களுடைய இளமையான தோற்றம் வெகு விரைவாக மங்கிப் போகும் அபாயம் உண்டு. முழு தானிய உணவு வகைகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை தரும். தினம் ஒரு தானியம் என்று பட்டியலிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் வாரம் ஒரு முறை இந்த குறிப்பை பயன்படுத்தி பேக் போட்டு பாருங்கள்! நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

egg-white

ஒரு சிறிய பௌலில் முட்டையை உடைத்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நான்கு, ஐந்து சொட்டுகள் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமான நல்லெண்ணெய் ஆக இருக்க வேண்டும். நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவுடன் சேர்த்து கொஞ்சம் பாசி பயறு மாவு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பேஸ்ட் போல கெட்டியாக தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை நன்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு ஒன்றோடொன்று கலக்கும்படி கலந்து வைத்து விடுங்கள், அதன் பிறகு 10 நிமிடம் கழித்து அதனை உங்களுடைய முகம், கழுத்து, கை, கால் போன்ற இடங்களில் எங்கெல்லாம் சுருக்கங்கள் இருக்கிறதோ! அங்கெல்லாம் பூசி உலற விடுங்கள். 15 முதல் 20 நிமிடத்திற்குள் சட்டென காய்ந்து உலர்ந்து விடும்.

face-pack0

அதன் பிறகு கைகளை வைக்காமல் காட்டன் துணி அல்லது சுத்தமான பஞ்சை கொண்டு குளிர்ந்த தண்ணீரில் நனைத்து முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். முகத்தை சுத்தம் செய்த பிறகு சோப்பு போட்டு முகத்தை எக்காரணம் கொண்டும் கழுவி விடக்கூடாது. முதலில் ஆரம்பிப்பவர்கள் இதனை வாரம் 3 முறை செய்யலாம்! அதன் பிறகு படிப்படியாக குறைத்து வாரம் ஒருமுறை செய்து வந்தால் மூன்றே மாதத்தில் நீங்கள் இளமையான தோற்றம் பெறுவீர்கள்.

- Advertisement -