இளமையான தோற்றத்துடன் எப்பொழுதும் இருக்கவே அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் எல்லா சமயங்களிலும் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை. வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மானுட உலகில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவே நேரம் இல்லாமல் இருக்கிறது. இதனால் சீக்கிரமே வயதான தோற்றத்தையும், வயதுக்கு மீறிய அறிவையும் பெற்று விடுகிறோம். எப்பொழுதும் யங்காக, புத்துணர்ச்சியுடன் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
முகம் எங்காக இருப்பதற்கு முதலில் முகத்தை வறட்சி இல்லாமல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அதே சமயத்தில் முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையும் நீங்கி பொலிவாக இருக்க வேண்டும். இந்த இரண்டையுமே செய்யக் கூடியது வெந்தயம் ஆகும். பிறகு முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அது மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் இரவு முழுவதும் இது ஊறிய பிறகு மறுநாள் நன்கு உப்பி வந்திருக்கும். இப்போது இந்த வெந்தயத்தை கொஞ்சம் ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு தக்காளி பழத்தை வந்து கழுவி சுத்தம் செய்துவிட்டு நான்கைந்தாக வெட்டி சேருங்கள். பின்னர் இதை நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.
ரைத்து எடுத்த இந்த கலவையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான கற்றாழை ஜெல்லை சேருங்கள். கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லையும் நீங்கள் பயன்படுத்தலாம். இப்போது இதை நன்கு கலந்து வைத்த பிறகு ஒரு பெரிய வடிகட்டியில் சேர்த்து வடிகட்டிக் கொள்ளுங்கள். ஒரு கிரீமி டெக்சருக்கு நமக்கு கிடைக்கும்.
இந்த வெந்தய க்ரீமை முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். கழுத்து பகுதிகளில் கூட நீங்கள் தடவி கொள்ளலாம். பின்னர் நன்கு உலர விட வேண்டும். ஒரு 20 நிமிடம் நன்கு உலர்ந்த பின்பு, முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி கொள்ளுங்கள். பிறகு மெல்லிய துணியால் முகத்தை ஒற்றி எடுங்கள். இது போல வாரம் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் முகத்தில் இருக்கக்கூடிய மாசு, மருக்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த கிரீமை வைத்து நீங்கள் மசாஜ் போலவும் செய்யலாம். ஒரு 20 நிமிடம் நன்றி மசாஜ் செய்து கழுவினாலும் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். வெந்தயம் முகத்தை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் வறண்ட தன்மையிலிருந்து பாதுகாத்து, நமக்கு ஒரு ஈரப்பதத்தை எப்பொழுதும் தக்க வைக்க உதவும். பின் இதில் சேர்க்கப்பட்ட தக்காளி, சருமத்தை உள்ளிருந்தே நமக்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய அத்தனை சத்துகளையும் கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:
என்னங்க தலையில முடி எல்லாம் கொட்டி வழுக்கை விழுந்துடுமான்னு பீல் பண்றீங்களா ? தேங்காய் எண்ணெயோடு இதை சேர்த்து தேச்சுப் பாருங்க முடி எப்படி கிடுகிடுன்னு வளருதுன்னு மட்டும் பாருங்க.
கற்றாழை ஜெல் புத்துணர்வாக வைத்துக் கொள்ள உதவும். இது வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்து நம்மை எளிதாக மீட்டுக் கொண்டு வர கூடிய அற்புதமான பொருளாக இருக்கிறது. இம்மூன்றும் ஒரே இடத்தில் சேரும் பொழுது நம்முடைய சருமமானது முகச்சுருக்கங்கள் இல்லாமல் பொலிவுடன் யங்காக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க.