என்னங்க தலையில முடி எல்லாம் கொட்டி வழுக்கை விழுந்துடுமான்னு பீல் பண்றீங்களா ? தேங்காய் எண்ணெயோடு இதை சேர்த்து தேச்சுப் பாருங்க முடி எப்படி கிடுகிடுன்னு வளருதுன்னு மட்டும் பாருங்க.

- Advertisement -

அந்த காலம் முதல் இன்றைய காலம் வரை முடி உதிர்வு பிரச்சனையிலேயே மிகவும் அதிக கவலை கொள்ள செய்வது முடி உதிர்ந்து வழுக்கையாவது தான். முடி வெள்ளையாக மாறினால் கூட அதையும் ஒரு ஸ்டைல் ஆக நினைத்து கொள்ளலாம் அல்லது அதையும் இப்பொழுது இருக்கும் காலத்திற்கேற்றபடி கலரிங் செய்து மாற்றிக் கொள்ளலாம். சுத்தமாக முடியே இல்லாமல் கொட்டி விட்டால் என்ன தான் செய்வது. இந்த முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய தலைமுறையினருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்த கூடியதாகவே இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது இயல்பு தான். அனைத்து முடி உதிர்வுகளும் வழுக்கை நிலைக்கு கொண்டு செல்லாது. சில நேரங்களில் முடி உதிர்ந்து அடுத்த முடி வளரும் போது மெலிதாக இருக்கும். இந்த வழுக்கை நிலைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மரபு வழியாகவும், நாம் உட்கொள்ளும் மருந்துகள் ரீதியாகவும், மன அழுத்தம் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள் என பல காரணங்கள் உண்டு. இப்போது இந்த பதிவில் முடி உதிர்ந்து வழுக்கையான இடத்தில் கூட தொடர்ந்து முடி வளர பயன்படுத்தக்கூடிய ஒரு எண்ணையை எப்படி தயாரிப்பது என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளர எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த எண்ணெய் தயாரிக்க கருஞ்சீரகம் 3 டீஸ்பூன், வெந்தயம் 3 டீஸ்பூன், சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 250 மில்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் கருஞ் சீரகத்தை சேர்த்து பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெந்தயத்தையும் சேர்த்து பொடி செய்து இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் 250 கிராம் தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்த இந்த கருஞ்சீரக வெந்திய பொடியை அதில் சேர்த்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இப்போது நீங்கள் தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்திருக்கும் அந்த கிண்ணத்தை எடுத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வைத்து டபுள் பாய்லிங் முறையில் எண்ணெயை லேசாக சூடு படுத்தி கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை கொஞ்சமாக எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து முடி உதிர்ந்த இடத்தில் ஒற்றி எடுத்து ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்க தலையில் ஊறிய பிறகு சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள்.

- Advertisement -

இதில் சேர்த்திருக்கும் கருஞ்சீரகம் ஆனது உங்கள் தலையில் முடி உதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடிகள் வளர உதவி செய்யும். அதே போல் வெந்தயத்தின் சத்துக்கள் புதிய முடியை வளர செய்வதோடு உடலில் குளுமைப்படுத்தி அந்த இடத்தில் புதிய ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய முடிகள் வளர செய்யும்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட்டாக ஒரே நாளில் முகம், கழுத்து பகுதி வெள்ளையாக வீட்டில் இருக்கக்கூடிய இந்த 3 பொருள் போதுமே!

இந்த எளிய முறையை பயன்படுத்தி உங்கள் தலையில் முடி உதிர்ந்த இடங்களில் எல்லாம் புதிய முடிகள் வளர உதவி புரியும். அது மட்டுமின்றி இளநரை, முடி உதிதல், முடி நன்றாக வளர என அனைத்து வகை பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு எண்ணை நல்ல தீர்வாக இருக்கும். நீங்களும் இதை ட்ரை பண்

- Advertisement -