- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகம் பளிங்குகள் போல ஜொலிக்க அழகு குறிப்பு.

முகம் பளிங்குகள் போல ஜொலிக்க அழகு குறிப்பு.

- Advertisement -

பொதுவாக பூசணிக்காய் என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது அமாவாசை அன்று திருஷ்டிக்காக பூசணிக்காய் சுற்றி உடைப்பது தான். ஆனால் அந்த பூசணிக்காவில் எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உள்ளுக்குள் பூசணிக்காவை எடுத்துக் கொள்வதால் உடலில் பல ஆரோக்கியம் ஏற்படுகிறது.

அதே பூசணிக்காயை நம் முகத்திற்கு பூசும்பொழுது நம் முகம் பளிங்கு கல் போல் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பூசணிக்காயை வைத்து முகத்தை எவ்வாறு அழகு பெற செய்ய முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம். ஒரு அகோரமான முகத்தை பூசணிக்காவில் வரைந்து திஷ்டிக்காக நம் வீட்டில் வைப்போம்.

- Advertisement -

அந்த பூசணிக்காவை நாம் முகத்தில் பயன்படுத்தும் போது எவ்வளவு மோசமான நிலையில் இருக்கக்கூடிய முகவும் மிகவும் அழகாக பளிங்கு போல் வழு வழு என்று மாறிவிடும். முகத்தில் இருக்க கூடிய சிறு சிறு துவாரங்களும் அடைக்கப் படுவதோடு, தளர்ந்திருக்கும் முகமும் இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இந்த பூசணி சாறு உதவுகிறது.

சரி இப்பொழுது பூசணிக்காய் ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம். வெள்ளை பூசணிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். அதன் தோலையும் சுத்தமாக நீக்கிவிட வேண்டும். பச்சை நிறம் என்பதே இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு தோலை நீக்கிவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது கடலை மாவு. மூன்றாவதாக சர்க்கரை. சர்க்கரையை அப்படியே சேர்க்கக்கூடாது. ஒன்று இரண்டாக உரலில் போட்டு இடித்து சேர்க்க வேண்டும். மிக்ஸியில் போடக்கூடாது.

ஒரு பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் பூசணி சாறை சேருங்கள். ஒரு ஸ்பூன் கடலை மாவை சேருங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒன்றிரண்டாக பொடித்து வைத்திருக்கும் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

இதை நாம் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட முகத்தில் தடவலாம். இப்பொழுது இந்த கலவையை எடுத்து முகத்தில் தடவ வேண்டும். அதற்கு முன்பாக முகத்தில் மேக்கப் ஏதாவது இருந்தால் அவை அனைத்தையும் எடுத்துவிட்டு, சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்றாக கழுவிய பிறகு இந்த கலவையை முகத்தில் பூச வேண்டும்.

ஒவ்வொருவருடைய சருமத்திற்கு ஏற்றவாறு இந்த கலவை காய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் குறிப்பிட்ட நேர அளவு என்பதை சொல்ல இயலாது. எப்பொழுது உங்கள் முகத்தில் நீங்கள் போட்டிருக்கும் இந்த கலவை காய்ந்து முகத்தை இறுக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நீங்கள் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

அழகு குறிப்பில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது கடலை மாவு. இந்த கடலை மாவு முகத்தில் இருக்கும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பூசணிக்காய் சாறு முகத்தை இறுக செய்யும். ஆதலால் முகத்தில் இருக்கக்கூடிய துளைகள் அனைத்தும் நீங்கும். மேலும் முகம் வெண்மை அடையும்.

இதையும் படிக்கலாமே: கறுத்த தேகம் தக தகன்னு தங்கம் மாறி 10 நிமிடத்தில் ஜொலிக்க உங்க வீட்டில் இந்த 2 பொருள் இருந்தாலே போதுமே!

இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து பாருங்கள். இது கன்னமா இல்ல சறுக்கு மரமா என்று கேட்பது போல் வலுவலுப்பாக இருக்கும். வெண்மையாகவும் இளமையாகவும் இருப்பீர்கள்.

சற்று முன்