முகத்தில் அழகைக் குறைக்கும் எந்த ஒரு அடையாளத்தையும், தடம் தெரியாமல் மாற்ற இந்த ஜெல் போதும். தேடினாலும் தழும்பை முகத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம்.

face6
- Advertisement -

சில பேருக்கு முகம் முழுவதும் ஏதாவது ஒரு தழும்பு, ஏதாவது ஒரு அடையாளம் இருக்கும். இது அழகாக இருக்கக்கூடிய முகத்தை கூட அழகில்லாமல் காண்பிக்கும். கரும்புள்ளிகள், கருத்தட்டுக்கள், முகப்பரு வந்து சென்ற தடம், குறுகுறுவாக சில பேருக்கு கொப்பளங்கள் கூட இருக்கும். சில பேருக்கு குழி குழியாக முகத்தில் ஓபன் போர்ஸ் இருக்கும். இப்படி உங்களுடைய முக அழகை குறைக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக அந்த பிரச்சனைகளுக்கு 15 நாட்களில் நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

முதலில் இதற்கு ஆளி விதையிலிருந்து எடுக்கப்பட்ட ஜல்லை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைத்தால் 10 லிருந்து 15 நிமிடத்தில் ஒரு ஜெல் தயாராகும். இதை சூடாக இருக்கும் போதே வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி ஜல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல் அப்படியே இருக்கட்டும். இந்த ஆளி விதையை ஆங்கிலத்தில் flax seeds என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஆலோவேரா ஜெல் நமக்குத் தேவை. கலர் மற்றும் வாசனை திரவியம் சேர்க்காத அலோவேரா ஜெல் கடைகளில் கிடைத்ததால் அதை வாங்கி 1 ஸ்பூன் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கற்றாழை ஒரு சிறிய துண்டு எடுத்து அதன் மேலே இருக்கும் மஞ்சள் பால் நீங்கும் படி கழுவி விட்டு, அதன் உள்ளே இருக்கக்கூடிய வெள்ளை ஜல்லை மட்டும் வெட்டி தனியாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இந்த ஜெல்லை குறிப்புக்கு பயன்படுத்தலாம்.

இப்போது நமக்கு தேவையான ஃபேஸ் ஜெல் தயார் செய்துவிடலாம். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேன் – 1 ஸ்பூன், கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன், அலோவேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 3 ஸ்பூன் ஊற்றி, இந்த எல்லா பொருட்களையும் கட்டிகள் இல்லாமல் கலக்கி இதை அப்படியே அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து கலந்தால் இந்த லிக்விட் ஜெல்லா ஆக நமக்கு கிடைக்கும். ஐந்தே நிமிடத்தில் அடுப்பை அணைத்துவிட்டு இதோடு ஆளி விதை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி மீண்டும் நன்றாக கலந்து ஆறவிடவும். இந்த க்ரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த க்ரீமை முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். கிரீமை முகத்தில் அப்பி கொள்ள வேண்டாம் லேசாக போடுங்கள். 10 நிமிடத்தில் இந்த ஜெல் நன்றாக காய்ந்து இறுக்கமாகும். முகத்தோடு முகமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். காரணம் இதில் காண்ப்பிளவர் சேர்த்து இருக்கின்றோம். முகம் நன்றாக காய்ந்த பின்பு உங்களுடைய கைகளை தண்ணீரில் நனைத்து, முகத்தை நனைத்து கொண்டு, வெறும் தண்ணீரில் முகம் கழுவ வேண்டும் அவ்வளவுதான்.

இரவு நேரத்தில் இந்த பேக்கை முகத்தில் போட்டு சோப்பு போடாமல் கழுவி விட்டு அப்படியே தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை சோப்பு போட்டு முகத்தை கழுவினால் தவறு கிடையாது. தினமும் இரவு இந்த கிரீமை பயன்படுத்தி வந்தால் உங்களுடைய சரும அழகில் நல்ல வித்தியாசத்தை 15 நாட்களில் காண முடியும். இந்த கிரீமை முகத்திற்கு அப்படியே பேக் போல நிறைய அப்ளை செய்யக்கூடாது. லேசாக தடவுங்கள் போதும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா. மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -