சரும பிரச்சனைகளுக்கு செலவில்லாமல் தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தும் இந்த தக்காளி ஒன்று மட்டும் போதும்

face19
- Advertisement -

தக்காளியை சருமத்க்கு பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியமான தீர்வாக இருக்கும். விலையுயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களுக்கு மத்தியில் ஒரு சிறிய தக்காளியை செலவில்லாமல் பயன்படுத்தி எப்படி நம்முடைய முகத்தை அழகாக்க முடியும் என்றும் குறிப்பாக, மழைக்காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்தை எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம். நம்முடைய தினசரி வாழ்வில் உணவாகப் பயன்படுத்தும் தக்காளியைக் கொண்டு நம்முடைய முகத்தில் ஏற்படும் பத்துக்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வு காணலாம். குறிப்பாக எல்லா வகை சருமத்துக்கும் தக்காளியை பயன்படுத்தலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படப் போவதில்லை. வாருங்கள் நமது அழகை மேம்படுத்த தக்காளி எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெயில் காலத்தில் தான் சருமம் கருமையடையும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிக மழை மற்றும் குளிராலும் நம்முடைய சருமம் கருத்துப் போகும். அதை எப்படி தக்காளியை வைத்து சரிசெய்ய முடியும் என்று பார்க்கலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது, முகத்தில் எண்ணெய் வடிவதை குறைப்பது, முகப்பருக்களிலிருந்து பாதுகாப்பது, சருமத்துளைகளை இறுக்கவது, இயற்கையான சூரிய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.

- Advertisement -

அதிகப்படியான வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு தருவது, வெப்பத்தால் ஏற்படும் சரும எரிச்சல்களுக்கு தீர்வு தருவது, இளமையான தோற்றத்தை தருவது, வயதான தோற்றம் ஏற்படாமல் தவிர்ப்பது, முகத்தை ஹைட்ரேட்டடாக பார்த்துக் கொள்வது என பல விதமான வழிகளில் தக்காளி நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளன. மேலும் அமில பண்புகளும் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு சரியான pH அளவை பராமரிக்க வழிவகுக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் வெளியே செல்லும் போதும் அழுக்குகள், எண்ணெய் பிசுப்புகள் என பல்வேறு விதமான சருமத்தை அச்சுறுத்தும் காரணிகள் முகத்தில் ஒட்டிக் கொள்கின்றன.

அவை சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து கொள்வதால் இறந்த செல்கள் வெளியேற முடியாமல் தேங்கிப் போகின்றன‌. தக்காளியில் உள்ள என்சைமன்கள் இந்த இறந்த செல்களை வெளியே கொண்டு வர உதவும்‌தக்காளியை கிரீம் போல அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பலனை அடையலாம். அதேபோல் அதிகப்படியான எண்ணெய் படிவதை தடுக்க தக்காளி அதிகமாக உதவுகிறது.

- Advertisement -

தக்காளியை இரண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் எண்ணெய் இல்லாத சருமம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். முகப்பரு பிரச்சினைகளுக்காக தக்காளியை பயன்படுத்தும் போது தக்காளியை கூழ் போல் அரைத்து தேயிலை எண்ணெய் சேர்த்து ஃபேஸ் பேக் போல பயன்படுத்த வேண்டும்.ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றில் இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறை சேர்த்து, முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் விரிந்த நிலையில் இருக்கும் பெரிய துளைகள் இறுகி இயல்பு நிலையில் இருக்கும்.தக்காளியில் லைகோபீன் உள்ளதால், அது புற ஊதா கதிர்களின் விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க அதுவும். சன்ஸ்கிரீன் போட்டுக் கொள்வதுடன் இதையும் சேர்த்துக் கொண்டால் சூரியக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து கூடுதலாக சருமத்தை பாதுகாக்க உதவும்.

தக்காளியை அரைத்து இரண்டு தேக்கரண்டி தயிருடன் சேர்த்து முகத்தில் தடவிவிட்டு 10-15 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்லது. தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். குறிப்பாக சரும எரிச்சல், அரிப்பு போன்றவற்றை தடுக்கலாம். தக்காளி சாறை சிறிது மோர் சேர்த்து எரியக்கூடிய இடங்களில் வைத்தால் இது சருமத்தை குளிர்விக்கும்.

- Advertisement -