முகம் எப்பொழுதும் பளிச்சென்று அழகாக இருக்க ,இப்படி எளிமையாக வீட்டிலேயே CTM செய்து கொள்ளுங்கள்

beauty
- Advertisement -

பெண்கள், ஆண்கள் ஆகிய இருவருமே இப்பொழுது தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் சம அளவு கவனம் செலுத்துகிறார்கள். எல்லோருக்கும் தங்கள் முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் இப்படி இருக்க வேண்டுமென்றால் நமது முகத்தை சரியாக பராமரிக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே தினமும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. காலை முதல் மாலை வரை முகத்தில் படியும் அழுக்குகளை இரவில் நிச்சயம் சுத்தம் செய்து தான் ஆக வேண்டும். அப்படி சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் அது நமது முகத்திலேயே படிந்து, துவாரங்களின் வழியே உள் சென்று, நமது முகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தான் கரும்புள்ளிகள், முகப்பரு போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். வீட்டிலேயே இப்படி CTM செய்துகொண்டால் போதும், உங்கள் முகம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கொஞ்சம் காலத்திற்கு முன் கூட்டி சென்றால் எவருக்கும் இது போன்ற பராமரிப்பு என்பது தேவை இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாசுபாடு குறைவாக இருந்தது. ஆனால் இப்பொழுது அனைவருக்குமே முகத்தைப் பராமரிப்பதும், மேக்கப் செய்வதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே CTM என்றால் பலருக்கும் தெரியாமல் இருப்பதில்லை.

- Advertisement -

கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங்கை தான் CTM என்று சொல்கின்றனர். கிளென்ஸிங் என்றால் முதலில் நமது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். டைனிங் என்றால் முகத்தில் படிந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத அழுக்குகளை சுத்தம் செய்வதாகும். மாய்ஸ்சுரைசிங் என்றால் நாம் சுத்தம் செய்யும் பொழுது முகத்துவாரங்கள் திறந்திருக்கும், அவற்றை மறுபடியும் சரி செய்வதற்காகத் தான் மாய்ஸ்சுரைசிங் செய்யப்படுகிறது.

இவ்வாறு CTM செய்வதற்கு பலவித அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை வாங்குவதற்கு வசதி இல்லாமல் இருந்தாலும், ஒரு சிலருக்கு இவற்றை பயன்படுத்துவது அலர்ஜியாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே இதனை சுலபமாக செய்து கொள்ளலாம். அதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது அனைவரது வீட்டிலும் தினமும் வாங்கக்கூடிய பால் ஆகும்.

- Advertisement -

கிளேன்சிங் செய்வதற்கு முதலில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் பாலை முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு லேசாக மசாஜ் செய்து, பிறகு முகத்தை கழுவ வேண்டும். அதன் பின்னர் டோனிங் செய்வதற்காக ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனையும் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி கொண்டு, ஐந்து நிமிடத்திற்கு லேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக மாய்ச்சுரைசிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது விட்டமின் ஈ எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, முகம் முழுவதும் தடவி விட வேண்டும். இந்த எளிய CTM முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்கள் முகம் எப்பொழுதும் தேவதைபோல் பளிச்சிடும்.

- Advertisement -