முகத்தில் இருக்கும் சிறு சிறு முடிகள், துளைகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற எல்லாமே உடனே நீங்கி முகம் கண்ணாடி போல பளிச்சென மின்ன இந்த 3 பொருட்கள் போதும்.

face-peel-carrot-potato
- Advertisement -

எல்லோரும் தன்னுடைய முகம் கண்ணாடி போல பளபளவென மின்ன வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். பளிங்கு போல மின்னும் முகத்தை பார்க்கும் பொழுது நமக்கே ஆசையாக இருக்கும். ஆனால் நம்முடைய முகத்தில் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஆங்காங்கே தெரிந்து முகத்தின் அழகை கெடுத்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை கூட வெகுவாக தளர்ந்து விடுகிறது. நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய நம் முகத்தை பட்டுப்போல் வைத்திருக்க வேண்டும். இதற்கு நம் வீட்டில் இருக்கும் இந்த மூன்றே பொருட்களை வைத்து எப்படி பயன்பெறுவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pimple

முகத்தில் வளர்ந்துள்ள சிறு சிறு முடிகள் முதல் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், கருமை மறைந்து முகத்தை பட்டுப் போல் மின்ன வைக்கும் இந்த அற்புத ஃபேஸ் பேக் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். மேலும் வயதான தோற்றத்தில் இருந்தும் இந்த ஃபேஸ் பேக் நமக்கு விடுதலை கொடுக்கும். இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் விழுந்து வயதான தோற்றம் உடையவர் போல் சிலருக்கு காண்பிக்கும் அவர்களெல்லாம் இதனை முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

கடைகளில் அதிக காசு கொடுத்து வாங்கும் இந்த ஃபேஸ் பேக் முகத்தில் தடவி பின் உரித்தால் வெங்காய தோல் போல அழகாக உரிந்து வந்துவிடும். சிலர் இதற்காக பார்லருக்கு சென்று கூட அதிக செலவு செய்து வருகிறார்கள். இந்த மூன்றே பொருட்களை வைத்து நமக்கு நாமே இதனை செய்து நல்ல பலன் பெறலாம். இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் ஒரே ஒரு காரட் மற்றும் ஒரே ஒரு உருளைக்கிழங்கு தான்.

jelatin-powder

பின்னர் இவற்றுடன் ஜெலட்டின் தூள் ஒரு டீஸ்பூன் தேவைப்படும். ஜெலட்டின் எனப்படும் இந்த வகையான தூள் கடல் பாசி, சர்க்கரை மற்றும் விலங்கு கொழுப்புகள் போன்றவற்றால் செய்யப்படுகின்றன. இது பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கும் உள்ளன. இணைய தளங்களில் கூட மிக சுலபமாக கிடைக்கும் இந்த ஜெலட்டின் பவுடர் இருந்தால் போதும், நாம் வீட்டிலேயே பார்லருக்கு செல்லும் அழகை கொண்டு வந்து விடலாம்.

- Advertisement -

முதலில் ஒரு முழு கேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து பிழிந்தால் எந்த அளவிற்கு சாறு கிடைக்கிறதோ அதனை பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே போல உருளைக் கிழங்கையும் தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் கிடைக்கும் சாற்றை காரட் சாறுடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பிரஷ் பயன்படுத்தி லேசாக தடவிக் கொள்ளுங்கள்.

face-peel

ஒரு இரண்டு நிமிடம் கழித்து பார்த்தால் லேசாக காய்ந்திருக்கும், பின்னர் மீண்டும் எடுத்து அதே போல இரண்டாவது கோட்டிங் கொடுத்து தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே 15லிருந்து 20 நிமிடம் வரை காய விட்டு விடுங்கள். பிறகு நன்கு காய்ந்து தோளுடன் தோளாக ஒட்டிக் கொண்டு விடும். அதனை அப்படியே மெதுவாக உரித்து எடுத்தால் போதும். நம் முகத்தில் இருக்கும் அத்தனை மாசு, மருக்களும் நீங்கி, தூசு, தும்புகள் அகன்று பளிச்சென முகம் பளிங்கு போல் மின்னும். இதே போல தொடர்ந்து வாரம் இரண்டு நாள் என்கிற கணக்கில், மூன்று மாதம் செய்தால் போதும்! உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- Advertisement -