24 மணி நேரமும் முகம் ஜொலி ஜொலிக்க அழகு குறிப்பு

face6
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. அழகாக இருந்தவர்கள் கூட ஒரு சில காரணங்களால் தங்களுடைய அழகை இழக்க நேரிட வேண்டிய சூழ்நிலை. உதாரணத்திற்கு சில பேருக்கு கழுத்தில் போட்டிருக்கும் செயினாலால் அலர்ஜி இருக்கும். சில பேருக்கு நெற்றியில் வைக்கும் பொட்டு குங்குமம், இவைகளால் கூட அலர்ஜி ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க முடியாது.

செயின் போட்டு போட்டு, கழுத்த கருப்பு, நெற்றியில் தினம் தோறும் குங்குமம் வைத்த அலர்ஜி என்று இப்படி பல வகைப்பட்ட பிரச்சனைகள் நம்முடைய சருமத்திற்கு இருக்கு. கருப்பான சருமத்தை எல்லாம் வெள்ளையாக மாற்ற, சரும பிரச்சனைகளை சரி செய்ய, ஒரு அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சரும பிரச்சனைகளை தீர்க்கும் அழகு குறிப்பு

இந்த அழகு குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள். முல்தானி மெட்டி, பச்சரிசி மாவு, ஆலுவேரா ஜெல், பன்னீர், தக்காளி, அவ்வளவுதான். இந்த பொருட்களை எல்லாம் முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன பவுலில் முல்தானிமெட்டி 2 ஸ்பூன், பச்சரிசி மாவு 1 ஸ்பூன், அலோவேரா ஜெல் 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் பேக்காக கலக்குவதற்கு தேவையான அளவு பன்னீர், எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு கலந்தால் ஃபேஸ் பேக் தயார்.

இதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி அந்த ஒரு பாதி தக்காளியை முகத்தில் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கழுத்துப் பகுதியில் கருப்பு அதிகமாக இருக்கிறது எனும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து இந்த தக்காளியால் மசாஜ் செய்து விடுங்கள்.

- Advertisement -

10 நிமிடம் அப்படியே விடவும். பிறகு முகத்தை தண்ணீரில் கழுவினாலும் சரி, அல்லது ஒரு துண்டை வைத்து துடைத்துக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய சகோதரியும். தக்காளி ஃபேஸ் பேக் போட்டு தக்காளி மசாஜ் செய்த பின்பு, 15 நிமிடங்கள் கழித்த பிறகு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்யுங்கள்.

குறிப்பாக உங்களுக்கு அடர் கருப்பு எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பேக்கை திக்காக போட்டுக்கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கண்களை மூடி, கண்களில் இரண்டு துண்டு வெள்ளரிக்காய்களை வெட்டி வைத்து ரிலாக்ஸாக அமருங்கள். பேக் காய்ந்து விடும்.

- Advertisement -

காய்ந்த பேக்கை நன்றாக ஈரம் செய்து விட்டு, வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவி விடவும். அவ்வளவுதான். உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசத்தை காணலாம். எப்போதுமே எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும் சருமம் கூட நல்ல பொலிவை பெறும். இந்த பேக்கை முகம் தவிர கை கால் பகுதிகளிலும் அப்ளை செய்யலாம்.

உள்ளே இருக்கக்கூடிய அந்தரங்கப் பகுதிகளில் அதிக கருப்பு நிறம் உங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது எனும் போதும், அந்த இடத்திலும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம் தவறு கிடையாது. மேலே சொன்னது போல தக்காளியில் கருப்பான சருமத்தை மசாஜ் செய்துவிட்டு இந்த பேக்கை போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் தலை முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர டானிக் தயார் செய்யும் முறை

ரிசல்ட் டபுள் ஆக, உடனடியாக உங்களுக்கு தெரியும். ரொம்பவும் அதிக அழகு கிடைக்கிறதே என்று இந்த பேக்கை தினமும் பயன்படுத்தினாலும் தவறுதான். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் செய்தாலே போதுமானது.

- Advertisement -