1000 வாட்ஸ் பல்ப் மாதிரி உங்களுடைய முகத்தை பிரகாசமாக மாற்ற வெறும் 1 நிமிடமும், இந்த 1 சோப்பு இருந்தால் போதும்.

face7
- Advertisement -

முகம் வெள்ளையாக இனி பேக் போட்டு 10 நிமிடங்களோ அல்லது 20 நிமிடங்களோ காத்திருக்க வேண்டாம். இந்த சோப்பை போட்டு முகத்தை கழுவினால் இன்ஸ்டன்டாக முகம் வெள்ளை ஆகும். நம்ப முடியவில்லையா. அப்படிப்பட்ட அந்த சோப் எந்த சோப். உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. இருக்கும் இடத்திலிருந்து ஒரு நொடி பொழுதில் உங்களை வெள்ளையாக்க போகும் அரிசி மாவு சோப் தயார் நம் கையாலேயே தயார் செய்வது எப்படி என்ற சுலபமான குறிப்பு இதோ உங்களுக்காக.

இந்த சோப் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன், ஆலுவேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், பியர்ஸ் சோப் – 1, விட்டமின் – E கேப்ஸ்யூல் – 1, அவ்வளவு தான். வீட்டில் இருந்தபடியே இந்த சோப்பை தயார் செய்து விடலாம். (எந்த கலர் பியர்ஸ் சோப் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கண்ணாடி போல இருக்கும் வேறு சோப்பை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

மூன்று டேபிள் ஸ்பூன் பச்சரிசியை ஒருமுறை கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 1 லிருந்து 1 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு, அந்த அரிசியை வெள்ளை காட்டன் துணியில் பரப்பி நன்றாக ஃபேனுக்கு கீழே வைத்து ஆற விடுங்கள். ஆறிய இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். அரிசி மாவு கொரகொரப்பாகத்தான் அறைபடும். சலித்து நைசாக இருக்கும் மாவை மட்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பியர்ஸ் சோப்பை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பியஸ் சோப்பை டபுள் பாய்லிங் மெதடில் சூடு செய்து கரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, நீரை ஊற்றி சூடு செய்ய வேண்டும். வெந்நீருக்கு மேலே ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து, அந்த கிண்ணத்தில் வெட்டி வைத்திருக்கும் சோப்பை போட்டால், சோப் உருகி கரைய தொடங்கும். உருகிய இந்த பியர்ஸ் சோப்பில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், அலோவேரா ஜெல் 1 ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். எல்லாம் ஒன்றாக கரைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். (இவை அனைத்தும் சுடுதண்ணிர் சூட்டிலேயே உருக வேண்டும். அடுப்பில் நேரடியாக வைத்து சோப்பை காய்ச்ச கூடாது.)

- Advertisement -

இப்போது உருகி நம் கையில் லிக்விட் ஆக இருக்கும் இந்த சோப்பை, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் 12 மணி நேரம் வைத்து எடுத்தால் சூப்பரா செட்டாகி நமக்கு சோப் கிடைக்கும். பிளாஸ்டிக் கிண்ணத்தில் சூடான சோப்பை ஊற்றிய பின்பு, அது கொஞ்சம் ஆறிய பின்பு ஃப்ரீசரில் எடுத்து வைத்து விடுங்கள். (ஃப்ரீசரில் இருந்து பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து கவிழ்த்தால் சூப்பராக சோப் கிடைத்துவிடும்.) அவ்வளவு தான். இந்த சோப்பை வெளியில் எடுத்து வைத்து அப்படியே பயன்படுத்தலாம். எதுவும் ஆகாது.

இதையும் படிக்கலாமே: நல்ல கலரா தான் பா இருந்தேன் என்னன்னு தெரியல திடீர்னு கறுத்து போய்ட்டேன். இப்படி நீங்க பீல் பண்றீங்களா அப்போ இந்த கிரீம் யூஸ் பண்ணி பாருங்க நம்ப முடியாத அதிசயம் நடக்கும்.

இந்த சோப்புக்கட்டியை முகத்தில் போட்டு தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினாலே உங்களுடைய முகம் உடனடியாக பொலிவு வரும். சாதாரண சோப்பு பயன்படுத்துவது போல தான் உடம்புக்கும் இந்த சோப்பு போட்டு குளிக்கலாம். சூப்பரான சோப் இது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -