வெயிலினால் முகம் மங்கலாகி போய்விட்டதா? மீண்டும் பொலிவிழந்த முகம் சிகப்பழகு பெற காய்கறி வெட்டும் போது இதை மட்டும் செய்யுங்கள்!

banana-tomato-face-pack
- Advertisement -

அதிகம் வெயிலில் சுற்றுபவர்களுக்கு முகம், கழுத்து, பின் கழுத்து, கைகளில் மட்டும் மங்கலான கறுத்துப் போன சருமம் போல தோற்றமளிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வெயில் படாததால் நல்ல நிறமாக இருக்கும். இப்படி வெயில் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட கறுமையை போக்க ரொம்பவே சுலபமாக நாம் சமைக்கும் பொழுது செய்து விடக் கூடிய ஒரு அற்புத குறிப்பு தான் இது. இப்படி செய்து வந்தால் நாளடைவில் கறுமை மறைந்து வெயில் படும் இடங்களிலும் சிகப்பழகு கிடைத்துவிடும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் காய்கறி நறுக்கும் மதிய வேளையில் நீங்கள் சாலட் அல்லது ஜூஸ் போடுவதற்கு பழங்கள் நறுக்குகிறீர்கள் என்றால் அதிலிருந்து ஒரு சில துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம், தர்பூசணி போன்றவை சரும அழகை பேணிப் பாதுகாக்கும் அற்புத பழங்கள் ஆகும். எந்த பழமாக இருந்தாலும், அதிலிருந்து ஒரு சிறு துண்டை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது போல சமையலுக்கு காய்கறிகளை நறுக்கும் பொழுது தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை நறுக்கும் பொழுது அதிலிருந்து கொஞ்சம் சாற்றை மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி நறுக்கும் பொழுது அப்படியே பிழிந்து கொஞ்சம் கிண்ணத்தில் சாற்றை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல எலுமிச்சையும் அப்படி தான். இதை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் வேலைகளை எல்லாம் முடித்த பின்பு ரொம்பவே சுலபமாக ஒரு பேக் போட்டுக் கொள்ளலாம்.

சிகப்பழகு பெற முதலில் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புத்துணர்வாக புதிய செல்களை தூண்டி விட செய்ய வேண்டும். இதற்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ளுங்கள். தேனுடன் நீங்கள் எடுத்து வைத்துள்ள தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள ஏதாவது ஒரு பழத் துண்டை நன்கு கூழ் போல் கைகளால் பிசைந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதிலிருந்து கால் ஸ்பூன் மட்டும் கைகளில் விட்டு அதில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே நெற்றி, கண்ணம் என்று முகம் முழுவதும் லேசாக அழுத்தம் கொடுக்காமல் ஸ்கிரப்பர் போல தேய்த்து கொடுக்க வேண்டும். சொர சொரப்பாக இருப்பதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், தேவையில்லாத கரடு முரடாக இருக்கும் கழிவுகளை எல்லாம் எடுத்து விடும். அதன் பிறகு முகத்தை ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு பின்பு நீங்கள் கலந்து வைத்துள்ள அந்த கலவையுடன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து முகம் முழுவதும் மீண்டும் தடவி கொள்ளுங்கள்.

இது நீங்கள் எந்த இடங்களில் எல்லாம் நிறம் மங்கிப் போய் இருக்கிறதோ, அந்த இடங்களில் எல்லாம் தடவிக் கொள்ளலாம். கைகள், கால்கள், கழுத்து பகுதி போன்ற எல்லா இடங்களிலும் இப்படி தடவி ஒரு 20 நிமிடம் நன்கு உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து, காய்ந்த பின்பு முகத்தை அலம்பிக் கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை நீங்கள் செய்து வந்து பாருங்கள், ரொம்பவே சீக்கிரமாக உங்கள் இழந்த பொலிவு மீண்டும் சிகப்பாக மாறும்.

- Advertisement -